- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, tamilnadu
- Course
- LUNCH
மதிய வேளையில் டக்குன்னு ஒரு பொரியல் செய்ய வேண்டுமானால், அகத்தி பூக்களை கொண்டு பொரியல் செய்யலாம். அகத்தி பூ உடலுக்கு மிகவும் நல்லது. அதுவும் வாரத்திற்கு ஒருமுறை அகத்தி பூ சாப்பிட்டால், அது உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் என்று சாப்பிடுவதற்கு ஏதாவது ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம்.
இதனையும் படியுங்கள் : ருசியான முட்டை கோஸ் பருப்பு கூட்டு இப்படி செய்து பாருங்க? சுட சுட சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!!
பொதுவாக கீரையை சாப்பிட குழந்தைகள் அடம் பிடிப்பார்கள். அப்படியெனில் அவர்களுக்கு கீரையை வித்தியாசமான முறையில் இப்படி சமைத்துக் கொடுங்கள். இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கும். இதனை சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், பருப்பு சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
Ingredients
Method
அகத்தி பூக்களை பறித்து தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அகத்திப்பூக்களை பொடியாக நறுக்கி, மற்ற தாளிக்க தேவையான பொருட்கள் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
கடுகு பொரிந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்பு அகத்தி பூவை சேர்த்து நன்கு கலந்து மூடி வைக்கவும்.
ஐந்து நிமிடத்திற்கு பிறகு மேலே கொடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து மிதமான சூட்டில் வைத்து வதக்கவும்.
கடைசியாக தேங்காய் துருவல், மல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால் அகத்திப்பூ மசாலா ஃப்ரை தயார்.






