- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
புலாவ் அப்படின்னாலே நமக்கு நிறைய வகையான புலாவ் ஞாபகத்துக்கு வரும் நம்மளும் முட்டை புலாவ், வெஜிடபிள் புலாவ், மட்டன் புலாவ் அப்படின்னு எக்கச்சக்கமான புலாவ் வகைகள் செஞ்சு சாப்பிடுவோம். இந்த புலாவ் வகைகள் செஞ்சு அது கூட காரசாரமா ஏதாவது சைடு டிஷ் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சைவ உணவாளர்களுக்கு காளான் ஒரு அருமையான உணவுப் பொருள். அத்தகைய காளானைக் கொண்டு குழந்தைகளுக்கு காலை வேளையில் ஒரு காலை உணவு செய்ய நினைத்தால், காளான் புலாவ் செய்யுங்கள். இது மிகவும் ஈஸியான காலை உணவாக இருக்கும். மேலும் மதியம் சாப்பிடுவதற்கு சூப்பராகவும் இருக்கும்.
சிக்கனை பிடிக்காத அசைவ விரும்பிகள் இருக்க முடியாது, அதே போல காளான் பிடிக்காத அசைவ விரும்பிகளும் இருக்க முடியாது. ஏனென்றால், அசைவத்திற்கு ஏற்ற புரத சத்துக்களை கொண்டுள்ளது காளான். காளான் ஒரு சத்தான உணவுப் பொருள். இது டையட் மேற்கோள்வோருக்கு மிகச்சிறந்த உணவு. காளானில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன, அதோடு அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B மற்றும் D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன.
இத்தகைய நன்மைகளைப் பெற வேண்டுமானால், இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த காளானில் புலாவ் செய்யலாம். குழந்தைகள் கணவருக்கு இல்ல உங்களுக்கு கூட ஆபீஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு காலேஜ் லஞ்ச் பாக்ஸுக்குன்னு எல்லாத்துக்கும் செஞ்சு கொடுத்து விடலாம். கண்டிப்பா ஈவினிங் வீட்டுக்கு வரும்போது டிபன் பாக்ஸ் காலியா தான் வரும். அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான புலாவ் தான் இப்ப நம்ம செய்ய போற காளான் புலாவ். அவ்வளவு அருமையான ரொம்ப சிம்பிளா டேஸ்டா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ஒன் பாட் காளான் பிரியாணி
Ingredients
Method
முதலில் பாசுமதி அரிசியை நன்கு தண்ணீரில் அலசி விட்டு 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, அன்னாசி பூ, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் நன்கு வதங்கியதும், வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கொத்தமல்லி, புதினா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் காளான் சேர்த்து வதக்கவும், காளான் சற்று வதங்கியதும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காளான் புலாவ் தயார்.






