- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
வாழைக்காய் ரோஸ்ட், வாழைக்காய் கூட்டு, வாழைப்பூ வடை இதெல்லாம் ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவாங்க ஆனா வாழைப்பூ பொரியல் வாழைப்பூ கூட்டு அப்படின்னா பயப்படுவாங்க. அதுக்கு காரணம் வாழைப்பூவில் இருக்கக்கூடிய துவர்ப்பு. அந்த துவர்ப்பு தன்மை கொஞ்சம் கூட தெரியாம ஒரு சூப்பரான வாழைப்பூ பொரியல் செய்யலாம். வாழைப்பூவில் பெரும்பாலும் வடை தான் சுட்டு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் வாழைப்பூவில் ஒரு தடவை இந்த மாதிரி பொரியல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும்.
இதுல தேங்காய் துருவல் சேர்க்கறதால துவர்ப்பு தன்மையே இருக்காது. அதுமட்டுமில்லாம தாளிக்கிறதுக்கே நம்ம நிறைய பொருட்கள் சேர்க்க போறோம். இந்த வாழைப்பூ பொரியலை காரக்குழம்புக்கு சைடிஷா வச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும். இல்ல அப்படின்னா அப்படியே ஸ்னாக்ஸ் மாதிரி கூட சாப்பிடலாம். வாரத்துக்கு ஒரு தடவை இந்த வாழைப்பூவை உணவுல சேர்த்துகிறதால பெண்களுக்கு அவங்களோட கர்ப்பப்பை அவ்ளோ ஆரோக்கியமா இருக்கும். அது மட்டும் அல்லாமல் குழந்தைகள் சாப்பிடுவதால் நிறைய ஆரோக்கியமான சத்துக்களும் கிடைக்கும்.
அதனால வாழைப்பூ துவர்க்கும் அப்படின்னு பயந்துகிட்டு வீட்ல செய்யாம விட்டுறாதீங்க. இதுல அவ்வளவு சத்துக்கள் இருக்கு அதனால கண்டிப்பா வாரத்துல ஒரு தடவையாவது இந்த அருமையான வாழைப்பூ பொரியல் செஞ்சு சாப்பிடுங்க. ஒரு தடவை குழந்தைகளுக்கு கொடுத்து பாருங்க கண்டிப்பா அவங்களுக்கு பிடிக்கும் அதுக்கப்புறமா அடிக்கடி செஞ்சு கொடுங்க. அப்படியே சாப்பிட்ட அவங்க அடம் பிடிக்கிறார்கள் என்றால் சாதத்துல ஒளிச்சு வச்சு கூட கொடுத்து பழகுங்க. அந்த டேஸ்ட் நிஜமாவே உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சுடும். இப்ப வாங்க இந்த சுவையான வாழைப்பூ பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான வாழைப்பூ புட்டு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்த கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பொடி பொடியாக நறுக்கிய பூண்டு கடலை பருப்பு நறுக்கிய பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி நறுக்கி கழுவிய வாழைப்பூவை சேர்த்து வதக்கவும்.
வாழைப்பூ பாதி வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.






