- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
தக்காளி தொக்கு யாருக்கு தான் பிடிக்காது சாதம் இட்லி, தோசை, சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷன் அப்படின்னு சொல்லலாம். சுட சுட தக்காளி தொக்கு வச்சு சப்பாத்தி கொடுத்தாலும் சரி சாதம் போட்டு கிளறி கொடுத்தாலும் சரி, டேஸ்ட் சூப்பரா இருக்கும். அந்த தக்காளி தொக்கை சுட சுட சாதத்தில் போட்டு கிளறி ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு கொண்டு போகலாம். சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா வெச்சு சாப்பிடலாம் பூரிக்கும் சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம தக்காளி, வெங்காயம், பூண்டு எல்லாத்தையும் சுட்டு அதுல ஒரு தொக்கு செய்யப் போறோம். அந்த தொக்கு நார்மலா செய்ற தொக்க விட ரொம்ப வே சூப்பரா இருக்கும்.
டேஸ்டான இந்த தொக்குக்கு சாதம் பழைய சாதம் இட்லி தோசை சப்பாத்தி எல்லாமே ஒரு சூப்பரான காம்பினேஷனா இருக்கும். தயிர் சாதத்துக்கு இந்த தொக்கு வச்சு சாப்பிட்டா அவ்வளவு டேஸ்டா இருக்கும். ஆனா இந்த தொக்குல ஒரு சீக்ரட்டான பொருள் என்னன்னா உருளைக்கிழங்கு இந்த தக்காளி வெங்காயத்தோட சேர்த்து உருளைக்கிழங்கையும் சுட்டு எடுத்து ஒரு சூப்பரான ரெசிபி செய்ய போறோம். இது கூட சாதம் போட்டு கிளறி சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா இருக்கும். டேஸ்ட்டான இந்த ரெசிபிக்கு நாலஞ்சு சப்பாத்தி எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க.
நிறைய பழைய சாதம் மீந்து போச்சு அப்படின்னா, கவலையே படாதீங்க இந்த மாதிரி ஒரு சூப்பரான தக்காளி தொக்கு செஞ்சிடுங்க கண்டிப்பா பழைய சாதம் எல்லாமே காலி ஆகிவிடும். சுடு கஞ்சிக்கும் கூட இது ஒரு சூப்பரான சைடிஷ். உருளைக்கிழங்கும் சேர்த்து செய்ற இந்த ரெசிபி கண்டிப்பா சூப்பரா இருக்கும். இந்த பொருட்கள் எல்லாத்தையும் சுட்டு எடுத்து இடிக்கல் அப்படி இல்லன்னா அம்மிக்கல்லில் போட்டு இடிச்சு அதுக்கு அப்புறமா தொக்கு செய்யணும். காரத்துக்கு பச்சை மிளகாயும் சேர்க்கிறதால மிளகாய் தூள் உங்களோட டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி சேர்த்துக்கோங்க.
குழந்தைகளுக்கு கொடுக்குற மாதிரி இருந்ததுனா கொஞ்சம் காரம் கம்மியாவே கொடுக்கலாம். இது செய்றதுக்கு நிறைய நேரம் தேவைப்படாது. ஆனா எல்லாத்தையும் தனித்தனியா சுட்டு எடுக்குறதுக்கு டைம் ஆகுது அப்படின்னு வதக்கி செஞ்சிட்டீங்க அப்படின்னா கண்டிப்பா நல்லா இருக்காது. இந்த சுட்ட தக்காளி தொக்குக்கு இந்த முறையை பயன்படுத்தி எல்லாத்தையும் நல்லா சுட்டு அதுக்கு அப்புறமா செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சுவையான சுட்ட தக்காளி தொக்கு ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வறுத்த கத்திரிக்காய் தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
முதலில் வெங்காயம் தக்காளி இரண்டையும் தனித்தனியாக சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
பூண்டு பச்சை மிளகாய் உருளைக்கிழங்கு இதனை தனித்தனியாக சுட்டு எடுத்துக் கொள்ளவும்.
அனைத்திலும் தோல் நீக்கி இடிக்கல்லில் இதனை சேர்த்து நன்றாக இடித்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு இடித்து வைத்துள்ளதை சேர்த்து மிளகாய் தூள் மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வைக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுட்ட தக்காளி தொக்கு தயார்.






