- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
புலாவ் அப்படின்னாலே நமக்கு நிறைய வகையான புலாவ் ஞாபகத்துக்கு வரும் நம்மளும் முட்டை புலாவ் வெஜிடபிள் புலாவ் மஸ்ரூம் மட்டன் புலாவ் அப்படின்னு எக்கச்சக்கமான புலாவ் வகைகள் செஞ்சு சாப்பிடுவோம். இந்த புலாவ் வகைகள் செஞ்சு அது கூட காரசாரமா ஏதாவது சைடு டிஷ் வைத்து சாப்பிட்டால் டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். ஆனா இப்ப நம்ம செய்யப் போற இந்த நல்லா காரசாரமாய் இருக்கும் இதுக்கு சைடு டிஷ்ஷே தேவைப்படாது அப்படியே கூட சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு கணவருக்கு இல்ல உங்களுக்கு கூட ஆபீஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ்க்கு காலேஜ் லஞ்ச் பாக்ஸுக்குன்னு எல்லாத்துக்கும் செஞ்சு கொடுத்து விடலாம் கண்டிப்பா ஈவினிங் வீட்டுக்கு வரும்போது டிபன் பாக்ஸ் காலியாதான் வரும். அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான புலாவ் தான் இப்ப நம்ம செய்ய போற இந்த தவாப் புலாவ் இது மும்பை ஸ்டைல் தவா புலாவ் அப்படின்னு கூட சொல்லலாம். அவ்வளவு அருமையான ரொம்ப சிம்பிளா டேஸ்டா எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அருமையான வெஜ் புலாவ் சாப்பிட நினைத்தால் ருசியான வெந்தயக்கீரை புலாவ் இப்படி செய்து பாருங்க!
Ingredients
Method
காய்ந்த மிளகாயை ஒரு மணி நேரம் சுடு தண்ணீரில் ஊற வைத்து அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகாய் விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு மூன்று முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய கூடை மிளகாய் தேவையான அளவு உப்பு கரம் மசாலா மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி எடுத்து வைத்துள்ள முட்டையையும் சேர்த்து கிளறி மல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான தவா புலாவ் தயார்.






