- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- LUNCH
சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவு வகையான புலாவில் , பட்டாணி புலாவ், மஷ்ரும் புலாவ், சோயா புலாவ், வெஜ் புலாவ் என்று சாப்பிட்டு இருப்பீர்கள். வெந்தயக்கீரை சேர்த்து புலாவ் செய்துள்ளீர்களா? கீரை மிகவும் ஆரோக்கியமானது என்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதனால் தான் அடிக்கடி உணவில் கீரை சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால், அவற்றை நாம் பெரும்பாலும் பொரியலாகவோ, தேங்காய் போட்டு, அவித்தோ அல்லது பருப்பு போட்டு மசித்தோ பெரும்பாலும் பரிமாறுவோம். இது சிலருக்கு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. குறிப்பாக குழந்தைகள். எவ்வளவு சுவையாக சமைத்தாலும் அவர்களை சாப்பிட வைப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. அதனால் அதிக ஆரோக்கியம் நிறைந்த வெந்தயக்கீரையில் எப்படி சுவையான புலாவ் செய்வதென்று பார்க்கலாம். இது சாப்பிட அருமையாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தினமும் நாம் கீரையை உணவில் சாப்பிட எடுத்துக்கொள்வது நமது உடலுக்கு நல்லது. இன்று வெந்தயக்கீரையில் புலாவ் செய்வது எப்படி என காணலாம். அதிக அளவில் வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ள ‘வெந்தயக்கீரை’ உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வீட்டிலேயே சிறிய தொட்டியில் சிறிதளவு வெந்தயத்தை விதைத்து வைத்தால் மடமடவென வெந்தயக்கீரை முளைக்க ஆரம்பித்துவிடும். வெந்தயக்கீரை கடைகளிலும் கிடைக்கப் பெறுகின்றன. இந்த கீரையை வைத்து அட்டகாசமான சுவையில் புலாவ் செய்து கொடுங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
இதனையும் படியுங்கள் : ருசியான வெந்தயக் கீரை கிரேவி இப்படி செஞ்சு பாருங்க! குக்கரில் 1 விசில் வந்தால் போதும். ஆளை தூக்கும் வாசத்தில் அசத்தலான கிரேவி ரெடி உடனே ரெடி!
Ingredients
Method
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அரைமணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். வெந்தயக் கீரையை நன்கு அலசி வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசி பூ, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, புதினா சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு வெந்தயக் கீரையை சேர்த்து நன்கு வதக்கி, ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, மல்லித்தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
பின் குக்கரை திறந்து நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெந்தயக்கீரை புலாவ் தயார்.






