- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- deserts
முன்பெல்லாம் வீட்டில் எப்போதும் ஊறுக்காய் பாட்டில் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் வீடுகளில் ஜாம் பாட்டில் தான் இருக்கிறது. அந்த அளவிற்கு இந்த ஜாம் குழந்தைகள் மத்தியில் பெருமளவில் பரவி விட்டது. இப்போதுயெல்லாம் பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியில் சென்று படிப்பதும், வெளியில் தங்கி வேலை செய்வதும் கூட அதிகமாகி விட்டது. இந்த ஒரு ஜாம் பாட்டில் இருந்தால் போதும் அவர்களின் காலை, இரவு உணவு எளிமையாக முடிந்து விடுகிறது.
தக்காளியில் விதவிதமான உணவுகளை செய்து சாப்பிடலாம். பாரம்பரியமாக நம்முடைய உணவில் இந்த தக்காளி தொக்கு செய்வது என்பது மிகவும் ஒரு விஷயம். தக்காளி ஜாம் அருமையான சுவையில், இனிப்பு புளிப்பு காரம் உப்பு எல்லாவகையான சுவையும் சேர்ந்த அருமையான ஒரு தக்காளி ஜாம் ரெசிபி உங்களுக்காக. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதையும் படியுங்கள்: மாம்பழம் வைத்து இப்படி ஜாம் கூட செய்யலாமா? மாம்பழ ஜாம் மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!!
Ingredients
Method
பின் குறிப்பு தக்காளியினை நன்றாக அலசி எடுக்கவும், ஒரு பாத்திரத்தில் தக்காளி முழுகும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
நன்றாக வெந்த பின்பு தண்ணீரை வடித்து விட்டு தக்காளியினை சிறுது ஆற வைக்கவும்.
ஆறிய பிறகு தக்காளி தோல் நீக்கி விடவும். இதனை மிக்சியில் போடவும். இதனுடன் இரண்டு பச்சை மிளகாய் மற்றும் உப்பும் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் வடிக்கட்டவும். மற்றும் ஒரு பாத்திரத்தில் அரைத்த தக்காளி விழுதினை சேர்க்கவும்.
நன்றாக கொதிக்க வைக்கவும். தக்காளி பச்சை வாசனை போகும் வரை நன்றாக வேக வைக்கவும். நன்றாக கொதிக்கும் பொழுது சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்க்கவும்.
மற்றும் ஒரு தாளிப்பு பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் பட்டை மற்றும் முந்திரி போட்டு தாளிக்கவும். இந்த தாளிப்பினை அப்படியே தக்காளி ஜாமில் கொட்டவும்.
நன்றாக கிண்டிவிட்டு பரிமாறவும்.






