- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- snacks

வாழை மரத்தில் இருக்கக்கூடிய வாழைக்காய் வாழைப்பழம் வாழைப்பூ வாழைத்தண்டு எல்லாமே நிறைய ஆரோக்கியமான நன்மைகளை கொண்டது. இந்த எல்லாத்தையுமே கண்டிப்பா உணவில் சேர்த்துக் கொள்வதால் நிறைய நன்மைகள் நம்ம உடம்புக்கு கிடைக்கும். முக்கியமா சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனை இருக்கிறவங்க மறக்காம வாரத்தில் இரண்டு தடவையாவது வாழைத்தண்டு சாப்பிடலாம். வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் சத்துக்கள் இருக்கு அதனால அடிக்கடி சாப்பிடலாம்.
இந்த மாதிரி வாழைப்பூ சாப்பிடுவதால் பெண்களுக்கு அவங்களுடைய கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கும். அதனால மிஸ் பண்ணாம இந்த வாழைப்பூ கண்டிப்பா வாரத்துல ரெண்டு தடவையாவது சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில வாழைப்பூ வைத்து வாழைப்பூ கூட்டு வாழைப்பூ வடை அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செய்யலாம். இன்னைக்கு நம்ம வாழைப்பூ வைத்து ஒரு சூப்பரான வாழைப்பூ பக்கோடா செய்ய போறோம். பொதுவா சின்ன குழந்தைகள் எல்லாம் வாழைப்பூவில் இருக்கிற துவர்ப்பு சுவைக்கு வாழைப்பூ சாப்பிட மாட்டாங்க.
அந்த மாதிரி வாழைப்பூ சாப்பிடாத உங்களுக்கு ஒரே ஒரு தடவை இந்த மாதிரி வாழைப்பூ பக்கோடா செஞ்சு கொடுங்க கண்டிப்பா வேண்டாம் அப்படின்னு சொல்லவே மாட்டாங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த வாழைப்பூ பக்கோடா ரெசிபி தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்குமே பெர்ஃபெக்ட்டா இருக்கும். சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க. இந்த வாழைப்பூ பக்கோடாவை மாலை நேரத்தில் டீ, காபியோட சேர்த்து சாப்பிட ரொம்ப ருசியாக இருக்கும். இப்ப வாங்க இந்த வாழைப்பூ பக்கோடா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வாழைப்பூவில் ஒரு தடவை சாம்பார் செஞ்சு பாருங்க!
Ingredients
Method
வாழைப்பூவை முதலில் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மிளகு தூள் இஞ்சி பூண்டு விழுது கடலை மாவு அரிசி மாவு சோள மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து எண்ணெயில் போட்டு பொறித்தெடுத்தால் சுவையான வாழைப்பூ பக்கோடா தயார்.






