- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- LUNCH
தென்னை மரத்திலையும் வாழை மரத்திலையும் இருக்க ஒவ்வொரு பாகங்களும் நமக்கு ரொம்பவே ஆரோக்கியமானது. தென்னை மரத்தில் இருக்கிற பாகங்கள் கூட நம்ம உடம்புக்கு நல்லதுன்னு சொல்ல முடியாது. ஆனா வாழை மரத்தில் இருக்கிற ஒவ்வொரு பாகங்களும் நம்ம சாப்பிடுறதுக்கும் உடலுக்கும் ரொம்ப ஆரோக்கியமானது என்று சொல்லலாம். வாழைத்தண்டு சாப்பிட்டா சிறுநீர் பிரச்சினைகளுக்கு சிறுநீரில் கற்கள் ஏற்படாமல் இருப்பதற்கு ரொம்பவே நல்லது.
வாழைக்காய் வச்சு வறுவல் செஞ்சா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். அந்த வகையில வாழைப்பூ வச்சு நம்ம வடை செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இன்னைக்கு ரொம்ப சிம்பிளான ஒரு வாழைப்பூ பொரியல் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த வாழைப்பூ பொரியல் செய்வதற்கு ரொம்பவே குறைவான பொருட்கள் மட்டுமே நமக்கு தேவைப்படும் ஆனா டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும் கார குழம்புக்கு இதை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும்.
வாரத்துல ஒரு தடவையாவது இந்த வாழைப்பூ பொரியல் நம்ம சாப்பிட்டோம்னா சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையோட அளவு குறைவாகும். ரத்த சோகையில் உள்ளவர்களுக்கும் ரொம்பவே நல்லது அதுக்கும் மேல சிறுநீர் கற்கள் ஏற்பட்டது சரியாகும். இந்த மாதிரி பலவிதமான நன்மைகள் இருக்கக்கூடிய இந்த வாழைப்பூவ சின்ன குழந்தைகள் இருந்தே உங்க குழந்தைகளுக்கும் கொடுத்து பழகுங்க சாப்பிட மாட்டேன் பரவால்ல கட்டாயப்படுத்தி கூட அதை சாப்பிட வைங்க என அவ்வளவு நல்லது உடம்புக்கு. இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான சுவையான ரொம்ப சிம்பிளான ஒரு வாழைப்பூ பொரியல் எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்
இதையும் படியுங்கள் : வீடே மணக்க மணக்க ருசியான வாழைப்பூ தோசை ஒரு தரம் இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
பிறகு வாழைப்பூவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து போட்டு தாளித்து கொள்ளவும்
கருவேப்பிலை காய்ந்த மிளகாய் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
அனைத்தும் வதங்கிய பிறகு வாழைப்பூவை சேர்த்து ஐந்து நிமிடம் கிளறிய பிறகு தேங்காய் துருவல் சேர்த்துஇறக்கினால் சூப்பரான சிம்பிளான வாழைப்பூ பொரியல் தயார்.






