- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
நம்ம குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு ஒவ்வொரு நாளும் வித்தியாசமா ஒன் பாட் கலவை சாதம் மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுத்துட்டு இருப்போம். அந்த வகையில ரொம்ப ரொம்ப உடம்புக்கு ஆரோக்கியமான வாழைப்பூவை வச்சு சூப்பரான ஒரு வாழைப்பூ சாதம் செஞ்சு உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்துட்டு நீங்களும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். குழந்தைகளும் டிபன் பாக்ஸ காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க அந்த அளவுக்கு ஒரு சூப்பர் டேஸ்டான ரெசிபி தான் இந்த வாழைப்பூ சாதம். வாழைப்பூ வச்சு வாழைப்பூ கூட்டு வாழைப்பூ வடை வாழைப்பூ பொரியல் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்போம் ஆனால் ஒரு தடவை கூட இந்த மாதிரி வாழைப்பூ வச்சு சாதம் செஞ்சிருக்க மாட்டோம்.
வாழைப்பூ சாப்பிட மாட்டோம் அப்படின்னு அடம் பிடிக்கிற குழந்தைகள் கூட இந்த மாதிரி ஒரு வாழைப்பூ சாதம் செஞ்சு கொடுத்தா கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. இதுக்கு சைடு தேவை இல்ல அவ்ளோ ருசியா இருக்கும் தேவைப்பட்டால் கொஞ்சமா அப்பளம் வறுத்து வெச்சு சாப்பிடுங்க டேஸ்ட் அந்த அளவுக்கு தாறுமாறா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியா தக்காளி சாதம் தயிர் சாதம் புளி சாதம் லெமன் சாதம் அப்படின்னு செய்யாம வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தடவை வாழைப்பூ சாதம் செஞ்சு தான் பாருங்களேன். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான வாழைப்பூ சாதம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : கறி சுவையை மிஞ்சும் சுவையில் வாழைக்காய் சுக்கா இனி இப்படி செய்து பாருங்கள்!!
Ingredients
Method
முதலில் வாழைப் பூவை நன்கு சுத்தம் செய்து கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு பட்டை கிராம்பு, சீரகம் கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
ஒரு பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது ஒரு தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய் தூள் குழம்பு மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நறுக்கிய வாழைப் பூவையும் சேர்த்து எண்ணெய் பிரிந்தும் வரும் வரை நன்றாக வதக்கவும்.
பிறகு வடித்த சாதத்தை சேர்த்து கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான வாழைப் பூ சாதம் தயார்.






