- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- andhra, Indian
- Course
- LUNCH, Side Dish
பச்சை காய்கறிகளில் ஒன்றான வெண்டைக்காயில் நிறைய ஆரோக்கியம் நிறைந்த வைட்டமின்களும் சத்துக்களும் இருக்கு. இதை குழந்தைங்களுக்கு கொடுத்தா அவங்களுக்கு புத்தி கூர்மை நல்லா இருக்கும் அப்படின்னு பலர் சொல்ல கேட்டிருப்போம். அந்த வகையில இந்த வெண்டைக்காய் வச்சு வெண்டைக்காய் காரக்குழம்பு, வெண்டைக்காய் பொரியல் வெண்டைக்காய் புளி கூட்டு வெண்டைக்காய் சிப்ஸ் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செய்யலாம். வெண்டைக்காய் வச்சு செய்யக்கூடிய எல்லா ரெசிபீஸூம் ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஆந்திரா ஸ்பெஷல் வெண்டைக்காய் காரம் செய்ய போறோம்.
இது ரொம்ப ரொம்ப சிம்பிளான ரெசிபி அதே நேரத்துல ரொம்ப ரொம்ப சுவையான ரெசிபியும் கூட. இந்த ரெசிபி செய்றதுக்கு நாலைந்து பொருள் மட்டுமே தேவைப்படும். சூப்பரா மொறு மொறுன்னு சாப்பிடுறதுக்கே அவ்வளவு ருசியா இருக்கும் இந்த ரெசிபி. குழந்தைகளுக்கு இந்த ஸ்னாக்ஸா கூட கொடுக்கலாம். ரசம் சாதம் தயிர் சாதம், சாம்பார் சாதம் புளி சாதம் லெமன் சாதம் எல்லாத்துக்குமே ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். இந்த சுவையான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல ஒரு நாள் செஞ்சு பாருங்க. குழந்தைகளுக்கு சைட் ஷஷ்ஷா லஞ்ச் பாக்ஸில் வைத்து விட்டீங்கன்னா கண்டிப்பா காலி பண்ணிட்டு தான் வருவாங்க.
சுவையான இந்த ரெசிபியை சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும் போல தான் தோணும். சைவத்துல இப்படி ஒரு அருமையான ரெசிபியா அப்படின்னு ஆச்சரியப்படுவீங்க அந்த அளவுக்கு ருசியாக இருக்கும். இது ஆந்திரா ஸ்டைல் ரெசிபி அப்படின்றதால கொஞ்சம் காரம் அதிகமா தான் இருக்கும் ஆனா உங்களுக்கு தேவைப்படற அளவுக்கு நீங்க காரம் சேர்த்துக்கலாம். இதுல வேர்க்கடலையையும் வறுத்து சேர்க்கிறதால வெண்டைக்காயையும் வேர்க்கடலையும் சேர்த்து சாப்பிடும் போது கடிக்கிறதுக்கு கிறிஸ்பியா அவ்வளவு ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான டேஸ்டான வெண்டைக்காய் காரம் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பெங்காலி வெண்டைக்காய் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடி பொடி ஆக நறுக்கி வைத்த வெண்டைக்காயை சேர்த்து நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வேர்க்கடலையை சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும். பூண்டு எடுத்து இடித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் சீரகம் காஷ்மீரி மிளகாய் தூள் உப்பு சேர்த்து அரைத்து அதனையும் பூண்டுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள வெண்டைக்காய் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறினால் சுவையான வெண்டைக்காய் காரம் தயார்.






