- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பொதுவா குழந்தைகளுக்கு காய்கறிகளை வேகவைத்து பொரியல் செஞ்சு கொடுக்கிறது விட ஃப்ரை பண்ணி கொடுத்தோம் அப்படின்னா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த வகையில கிழங்கு வகைகளை ரோஸ்ட் செஞ்சு கொடுத்தாதான் குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. அந்த வகையில இப்ப நம்ம சேனைக்கிழங்கு ரோஸ்ட் தான் பார்க்க போறோம். இந்த சேனைக்கிழங்க வேக வைக்கும் போது கொஞ்சமா புளி சேர்த்து வேக வச்சா சேனைக்கிழங்கு சாப்பிடுறதால வரக்கூடிய அரிப்பு நீங்கும். பொதுவா புது கிழங்கா இருந்தா நாக்கு பயங்கரமா இருக்கும் அதை தடுக்க தான் நம்ம புளி சேர்த்து வேக வைக்கிறோம்.
இந்தக் கிழங்கு வாங்கி கொஞ்ச நாள் அப்படியே வச்சுட்டு கூட நம்ம இத ரோஸ்ட் ஆக செய்யலாம். இதுல பொரியல் செய்வது விட இந்த மாதிரி ரோஸ்ட் செஞ்சா தான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் தயிர் சாதம் தக்காளி சாதம் வெஜிடபிள் சாதம் ரசம் சாதம் எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷனா இந்த சேனைக்கிழங்கு ரோஸ்ட் இருக்கும். உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு நீங்க எது கொடுத்து விட்டீங்கன்னா போதும் சாப்பாட்டை காலி பண்ணிட்டு தான் வீட்டுக்கு கொண்டு வருவாங்க. அந்த அளவுக்கு ருசியான இந்த சேனைக்கிழங்கு ரோஸ் உங்க வீட்ல நீங்களும் செஞ்சு அசத்துங்க இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான சேனைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான சேனைக்கிழங்கு பொடிமாஸ், சேனைக்கிழங்கை இப்படியும் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், ருசி நாக்கிலேயே நிற்கும்.
Ingredients
Method
முதலில் சேனைக்கிழங்கை கொஞ்சம் தடிமனாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் தண்ணீர் சேர்த்து மஞ்சள் தூள் புளி சேர்த்து 80 சதவீதம் வரை வேக வைக்கவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி பூண்டு கடலை மாவு சோம்பு மிளகாய் தூள் அனைத்தையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பாதி வேக வைத்த சேனைக்கிழங்கில் இந்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடங்களுக்கு பிறகு சூடான எண்ணெயில் நன்றாக பொரித்து எடுத்தால் சுவையான சேனைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.






