Advertisement
சைவம்

காலை உணவாக இந்த வெஜிடபிள் சப்பாத்தி ஒருமுறை செய்து பாருங்கள்,ருசியாக இருக்கும்!

Advertisement

தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக காய்கறிகள் சேர்த்து செய்ய உள்ளோம்.

இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். சப்பாத்தி, இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளடங்கியுள்ளன.

Advertisement

சப்பாத்தி என்று எடுத்துக் கொண்டால் நமக்கு முதலில் சிந்தனைக்கு வருவது உடல் இடையே குறைப்பதற்கு சப்பாத்தி சிறந்த உணவாக இருக்கும் என்ற அனைவரும் கூறுவார்கள். மேலும் சப்பாத்தியை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். வட இந்தியாவில் உள்ள மக்கள் சாப்பிடும் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது இந்த சப்பாத்தி தான். மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன. நீங்கள் வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால், தக்காளி தொக்கையும் இந்த சப்பாத்தியும் செய்து கூட எடுத்துக்கொண்டு போகலாம். இன்று மென்மையான காய்கறிகள் சப்பாத்தி எப்படி செய்வது என்ற சமையல் குறிப்பை இந்த தொகுப்பில் நாம் காணலாம்.

வெஜிடபிள் சப்பாத்தி | Vegetable Chapathi Recipe In Tamil

Print Recipe
தினமும் செய்யும் இட்லி, தோசை, பொங்கல், பூரி போன்ற உணவுகளை சாப்பிட்டு அலுத்து விட்டதா?அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான். நாம் தினமும் சாப்பிடும் உணவுகளை சற்று வித்தியாசமாக செய்து கொடுத்தாலே போதும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் வழக்கமாக செய்யும் சப்பாத்தியை கொஞ்சம் வித்தியாசமாக காய்கறிகள் சேர்த்து செய்ய உள்ளோம்.
Advertisement
இந்த சப்பாத்தி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை அருமையாகவும், அசத்தலாகவும் இருக்கும். நீங்கள் வெளியூர்களுக்கு செல்வதாக இருந்தால், தக்காளி தொக்கையும் இந்த சப்பாத்தியும் செய்து கூட எடுத்துக்கொண்டு போகலாம்.
Course Breakfast, dinner
Cuisine Indian
Keyword Vegetable Chapathi
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 52

Equipment

  • 1 பவுள்
  • 1 தோசை கல்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 2 கப் கோதுமை மாவு
  • 2 கேரட்
  • 1 பீட்ரூட்
  • 1 கப் கொத்தமல்லி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பீட்ரூட், கேரட் ஆகியவற்றை தோல் நீக்கி விட்டு வேக வைத்து எடுத்து பின் அரைத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லியை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் கோதுமை மாவு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள கேரட், பீட்ரூட், கொத்தமல்லி விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு சிறிது எண்ணெய் விட்டு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் பிசைந்த மாவின் மேல் கொஞ்சமாக எண்ணெய் தடவி, பத்து நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.
  • அதன்பிறகு சிறு‌ சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். சப்பாத்தி பலகையில் உருட்டிய மாவை வைத்து மெல்லிசாக தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தேய்த்து வைத்த‌ சப்பாத்தியை ஒவ்வொன்றாக போட்டு சிறிதளவு நெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான, மிருதுவான வெஜிடபிள் சப்பாத்தி தயார். இதற்கு உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா செய்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 52kcal | Carbohydrates: 6g | Protein: 5g | Fat: 2.7g | Sodium: 69mg | Potassium: 320mg | Fiber: 5.1g | Vitamin A: 83IU | Vitamin C: 62mg | Calcium: 33mg | Iron: 6.8mg

இதனையும் படியுங்கள் : ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் குஜராத் தேப்லா ரெசிபி ரெடி! ஒன்னு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

4 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

6 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

14 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

17 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago