மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட மொறு மொறு காய்கறி பக்கோடா இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம்
பக்கோடா இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, காலிஃப்ளவர் பக்கோடா, சிக்கன் பக்கோடா, முந்திரி பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது காய்கறிகள் பக்கோடா. தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா என்றும் அழைக்கப்படுகிறது. இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும் பிரபலம் அடைந்திருக்கிறது.
மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. விருந்தினர்களின் வருகையின் போதும், குழந்தைகளின் சிணுங்கலின் போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம் பெறுவதும் பக்கோடா தான். ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்து விடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் காய்கறிகள் வைத்து பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் கதம்ப காய்கறிகள் பால் கூட்டு சுலபமாக இப்படி செய்து பாருங்கள்!!!