- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு நம்ம எப்பவுமே புளிசாதம், லெமன் சாதம், தயிர் சாதம், முட்டை சாதம் அப்படின்னா இந்த மாதிரி தான் செஞ்சு கொடுப்போம். ஆனால் ஒரு தடவ இந்த மாதிரி ஒரு சூப்பரான வெஜிடபிள் எல்லாம் சேர்த்து புலாவ் மாதிரி செஞ்சு கொடுங்க கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த புலாவ் செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. உங்களுக்கு தேவையான வெஜிடபிள்ஸ் எல்லாமே சேர்த்துக் கொள்ளலாம். இப்ப நம்ம உருளைக்கிழங்கு கேரட் பச்சை பட்டாணி சேர்த்து இருக்கிறோம்.
உங்ககிட்ட என்ன காய்கறிகள் இருக்கோ அதனை சேர்த்து இந்த சூப்பரான ரெசிபியை நீங்க வீட்ல ட்ரை பண்ணலாம். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இதுல நம்ம பச்சை மிளகாய் கொத்தமல்லி, புதினா எல்லாத்தையும் அரைத்து சேர்க்க போறதால சுவை ரொம்பவே அட்டகாசமா இருக்கும். முந்திரி பருப்பு இதெல்லாம் போட்டு செய்யும் போது ரொம்பவே ரிச்சான டேஸ்ட்ல சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
சைடு டிஷ் கூட தேவைப்படாது உங்களுக்கு தேவைப்பட்டால் தயிர் பச்சடி வெள்ளரிக்காய் பச்சடி வைத்து சாப்பிடலாம் அவ்வளவு ருசியாக இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு கொடுத்து விடுங்கள். குழந்தைகள் மட்டுமில்லாம பெரியவங்களுக்கும் ஆபீஸ்ல லஞ்ச் பாக்ஸ்க்கு இதனை செஞ்சு கொடுக்கலாம் வீட்லயும் செஞ்சு சாப்பிடலாம் அவ்வளவு ருசியான ரெசிபியை கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க. இப்ப வாங்க இந்த ருசியான வெஜிடபிள் புலாவ் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : குதிரைவாலி தேங்காய்ப்பால் புலாவ்
Ingredients
Method
ஒரு மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலைகள் புதினா இலைகள் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு அனைத்தையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சமபங்கு சேர்த்து சீரகம் முந்திரிப் பருப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் அரைத்து வைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
கேரட் பச்சை பட்டாணி உருளைக்கிழங்கு அனைத்தும் நறுக்கி சேர்த்து எண்ணெயிலேயே வதக்கவும்.
ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் அரிசியை கழுவி சேர்த்து உப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கினால் சுவையான வெஜிடபிள் புலாவ் தயார்.






