நாம் பெரும்பாலும் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடும் அதிகபட்ச உணவு வகைகள் அசைவ உணவுகளாக தான் இருக்கும். அதையும் தாண்டி நாம் சைவ உணவுகளிலும் வரும் காய்கறிகளை வைத்து காய்கறி பெப்பர் ப்ரை தயார் செய்யலாம். ஆகையால் இன்று நாம் வெண்டைக்காய் பெப்பர் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த வெண்டைக்காய் பெப்பர் ப்ரையை அதிகமாக கல்யாண வீடுகளில் பரிமாறி பார்த்திருப்பீர்கள்.
இதையும் படியுங்கள் : சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டும் வெண்டைக்காய்!
இந்த வெண்டைக்காய் பெப்பர் ப்ரையை தயிர் சாதம், பால் சாதம், சாம்பார் சாதம் போன்ற உணவுகளுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது தாறுமாறான சுவையை நமக்கு தரும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு பெப்பர் ப்ரையாக மாறிப் போகும். அதனால் இன்று காரசாரமான வெண்டைக்காய் பெப்பர் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
வெண்டைக்காய் பெப்பர் ப்ரை | Vendaikkai pepper Fry Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ வெண்டைக்காய்
- 2 டீஸ்பூன் மிளகு
- 1 பெரியவெங்காயம்
- 3 பல் பூண்டு
- கடுகு தாளிக்க சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் நாம் வைத்திருக்கும் வெண்டைக்காயை தண்ணீரில் சுத்தமாக கழுவி நீளவாக்கில் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.
- அதன் பின்பு நாம் தை்திருக்கும் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு இந்த இரண்டையும் கூட பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- பின் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு மற்றும் இதனுடன் மிளகையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், அதனுடன் கடுகு போட்டு தாளித்த பிறகு வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு வதங்கிய வெண்டைக்காய் உடன் நாம் அரைத்த மிளகு, வெங்காய கலவையை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்.
- அதன் பின்பு வெண்டைக்காய் நன்கு வெந்து, வெண்டைக்காய் துண்டுகள் சுருங்கியதும் கடாயை இறக்கி விடுங்கள்.
- அவ்வளவுதான் இப்பொழுது காரசாரமான சுவையில் வெண்டைக்காய் பெப்பர் ப்ரை தயாராகிவிட்டது சுட சுட பறிமாறவும்.