- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 3
- Cuisine
- Indian
- Course
- LUNCH
கடவுளின் தேசம் என்றழைக்கப்படும் கேரள மாநிலம் எந்தவிதத்திலும் சந்தேகத்திற்கு இடமின்றி சுவையான உணவு வகைகளின் சொர்க்கமாகவும் உள்ளது. கேரளாவில் கிடைக்கும் உணவுகள் அவற்றின் தனித்துவத்திற்கு பெயர் பெற்றவை. அந்த வகையில் இன்று கேரளா ஸ்பெஷல் வெந்தயக்கீரை பொரியல் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் துணை புரிவது கீரைகள். பொதுவாக கீரைகளில் இரும்புச்சத்து நிறைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது உணவில் கீரையை சேர்த்துக் கொள்ள வேண்டும். வெந்தயக் கீரையில் ஏராளமான வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்துள்ளன. ஜீரண சக்தியை அதிகரித்து உடல் சூட்டை குறைத்து, தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் ஆண்மை பலப்பட ஆண்கள் அடிக்கடி வெந்தயக் கீரை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. வயிற்று பிரச்சனைகள், இடுப்பு வலியால் அவதிபடுபவர்கள் வெந்தயக் கீரையை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிடலாம். கீரைக்கூட்டு, கீரை கடைசல், கீரை குழம்பு என்று ஒவ்வொரு நாளும் ஒரு விதத்தில் சமைத்துக் கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். ஆனால் நாவிற்கு ருசியாக செய்து கொடுத்தால் தானே நம் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவார்கள். ஒருமுறை வெந்தய கீரையில் இப்படி பொரியல் வைத்து சுடச்சுட சாதத்தில் வைத்து கொஞ்சமாக நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். சொல்லும் போதே மணக்க மணக்க வாசம் வீசும்.
இதனையும் படியுங்கள் : வெந்தயக்கீரை வச்சு சுவையான ஆரோக்கியமிக்க பராத்தா இப்படி செய்து சாப்பிட்டு பாருங்கள்
Ingredients
Method
முதலில் வெந்தயக் கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் உருளைக்கிழங்கு மற்றும் கீரையை சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து கீரையை நன்கு சுருள வதக்கவும்.
கீரை நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான கேரளா ஸ்டைலில் வெந்தயக் கீரை பொரியல் தயார்.






