Advertisement
காலை உணவு

சுட சுட ருசியான வேர்க்கடலை சாதம் இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு பக்காவா இருக்கும்!!

Advertisement

நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட சமையல் சுவையாகவும், சத்துக்கள் மிகுந்ததாக இருந்தால், அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சத்தான சுவையான சாதம் தான் வேர்க்கடலை சாதம்.

இதனையும் படியுங்கள் : பிரியாணி சுவையில் ருசியான கிராமத்து தக்காளி சாதம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!

Advertisement

வேர்க்கடலையில் பல சத்துக்கள் உள்ளன. வேர்க்கடலை சாதம் என்பது ஒரு சுவையான தென்னிந்திய சாத வகையாகும், இது வறுத்த வேர்க்கடலை தூள், பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இது வெர்க்கடலை சாதம் என்றும் தென்னிந்திய வீடுகளில் தயாரிக்கப்படுகிறது. இந்த சைவ உணவு மிகவும் எளிமையானது, ஆரோக்கியமானது மற்றும் சுவையானது.

வேர்கடலை சாதம் | Verkadalai Sadam Recipe in Tamil

Print Recipe
நம்மில் பலருக்கு வித்தியாசமான உணவுகளை தேடி அல்லது தயார் செய்து உண்ண மிகவும் பிடிக்கும். தற்போது ஒரு சிலர் பிரியாணி பக்கம் திசைமாறினாலும் சிலர் ஆரோக்கியமான உணவுகளை நோக்கி நகர்கின்றனர். முக்கியமாக இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட சமையல் சுவையாகவும், சத்துக்கள் மிகுந்ததாக இருந்தால், அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சத்தான சுவையான சாதம் தான் வேர்க்கடலை சாதம். வேர்க்கடலையில் பல சத்துக்கள் உள்ளன.
Course Breakfast, LUNCH
Cuisine Indian
Keyword Verkadalai sadam
Prep Time
Advertisement
15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 161

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 கரண்டி
  • 1 பவுள்

Ingredients

  • 3 கப் வடித்த சாதம்

வறுத்து

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/4 கப் வேர்க்கடலை
  • 2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 2 டீஸ்பூன் வெள்ளை எள்
  • 3 காஷ்மீர் மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்
  • உப்பு தேவையானஅளவு
  • 1 டீஸ்பூன் நெய்

தாளிக்க

  • 3 டீஸ்பூன் கடலை எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 2 வர மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • முதலில் வடித்த சாதம் ஒட்டாமலிருக்க எண்ணெய் சேர்த்து கிளறி ஆற வைக்கவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து 1ஸ்பூன் எண்ணெய் விட்டு வேர்க்கடலை சேர்த்து லேசாக வறுத்து பின் உளுந்து சேர்த்து வறுக்கவும்.
  • அது லேசாக வறுபட்டதும், பின் எள் சேர்த்து லேசாக வறுக்கவும். இதனுடன் வரமிளகாய் சேர்த்து லேசாக சூடானதும் தேங்காய் துருவல் சேர்த்து ஈரப்பதம் போகும் வரை வறுக்கவும்.
  • பின்னர் வறுத்தவற்றை ஆற வைத்து மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொர கொரபரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய், கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.பின் வேர்கடலை சேர்த்து வறுக்கவும்.
  • பின் ஆற வைத்த சாதம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். நன்றாக கிளறியதும் அரைத்து வைத்த வேர்க்கடலை விழுது சேர்த்து மெதுவாக கிளறி விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான, சத்தான வேர்கடலை சாதம் ரெடி. இதற்கு வெறும் தயிரில் உப்பு மற்றும் நறுக்கிய வெள்ளரி சேர்த்து கொடுத்தால் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 161kcal | Carbohydrates: 4.6g | Protein: 7.3g | Fat: 14g | Sodium: 18mg | Potassium: 705mg | Fiber: 2.4g | Calcium: 92mg | Iron: 4.58mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

33 நிமிடங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

11 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

11 மணி நேரங்கள் ago

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

12 மணி நேரங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

14 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

15 மணி நேரங்கள் ago