- Advertisement -
ஜீரணத்துக்கு ஏற்ற ஆரோக்யமான இஞ்சி குழம்பு செய்ய.இஞ்சி கிரகத்தின் ஆரோக்கியமான (மற்றும் மிகவும் சுவையான) மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது பல உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : மணமணக்கும் இஞ்சி சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?
- Advertisement -
இஞ்சி குழம்பு ஒரு தென்னிந்திய உணவாகும், இது அஜீரணத்தை நிராகரிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இஞ்சி குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த இஞ்சி குழம்பு செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
கிராமத்து இஞ்சி குழம்பு | Village Ginger Kulambu Recipe in Tamil
ஜீரணத்துக்கு ஏற்ற ஆரோக்யமான இஞ்சி குழம்பு செய்ய.இஞ்சி கிரகத்தின் ஆரோக்கியமான (மற்றும் மிகவும் சுவையான) மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். உங்கள் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வது பல உடல் மற்றும் உளவியல் ஆரோக்கிய நலன்களைப் பெறலாம்.இஞ்சி கறி ஒரு தென்னிந்திய உணவாகும், இது அஜீரணத்தை நிராகரிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இஞ்சி குழம்பு விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Yield: 4 People
Calories: 183kcal
தேவையான பொருட்கள்
- 2 tbsp துவரம் பருப்பு
- 2 tbsp கடலை பருப்பு
- 2 tbsp சாம்பார் பொடி
- 3 வெங்காயம்
- 25 இஞ்சி
- 20 பூண்டு
- ¼ tsp கடுகு
- 1 tsp வெந்தயம்
- ¼ tsp மஞ்சள் தூள்
- கறிவேப்பிலை சிறிதளவு
- ¼ tsp பெருங்காயம்
- 4 tbsp நல்எண்ணெய்
- புளி சிறிதளவு
- தண்ணீர் சிறிதளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- இஞ்சி குழம்பு செய்ய முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயத்தை மிக்சியில் போட்டு நைசாக அரைக்கவும்.
- பின் புளியை தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து வடிகட்ட வேண்டும்.
- அதன் பிறகு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் மிக்ஸியில் அரைத்த விழுதை போட்டு வதக்கவும்.
- நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். அடுத்து அதில் மஞ்சள் தூள் சேர்க்கவும். அடுத்து தண்ணீர், புளி கரைத்த தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காய தூள், வறுத்த வெந்தய பொடி, உப்பு எல்லாம் சேர்க்க வேண்டும்.
- நன்கு கொதித்து கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு ரெடி.
செய்முறை குறிப்புகள்
குறிப்பு
இந்த இஞ்சி குழம்பு வயிற்று உபாதைகளுக்கு மிகவும் நல்லது.
Nutrition
Serving: 400gm | Calories: 183kcal | Carbohydrates: 23g | Cholesterol: 1mg | Sodium: 1042mg | Potassium: 342mg | Sugar: 1.3g | Calcium: 2.3mg