Advertisement
உடல்நலம்

உடல் எடை கூடுவதை தடுக்க இனி நீங்கள் சாப்பிடக்கூடாத உணவு என்னெ்ன தெரியுமா ?

Advertisement

உடல் எடை போட்டுவிடக்கூடாதே என்று படாதபாடுபட்டு பல கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை தவிர்க்கும் பலர், அவர்களை அறியாமலேயே உடலை பருக்க செய்யும் உணவுகளையும் எடுத்துக் கொளவதாக கூறும் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ நிபுணர்கள், அத்தகைய உணவுகள் எவை என்பதையும் பட்டியலிட்டுள்ளனர்.

கீழ் காணும் இந்த ஐந்து வகையான உணவுகளை உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

Advertisement

பால்

உங்களது அன்றாட உணவு பட்டியலில் பாலையும் சேர்த்துக் கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் என்றாலும், அதிக எடை கொண்டவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாலை அதிக அளவில் அருந்துவதை தவிர்ப்பது நல்லது.சிலர் இரவில் படுக்கைக்கு போகும் முன்னர் ஒரு டம்ளர் பால் அருந்துவது வழக்கம்.வேறு சிலர் காலை உணவுக்கு பின்னரோ அல்லது மாலை சிற்றுண்டிக்கு பின்னரோ பால் அருந்துவது வழக்கம்.இத்தகைய பழக்கம் உடையவர்கள், குறைந்தது ஒரு மாதத்திற்காவது அப்பழக்கத்தை நிறுத்தி பார்த்தால் மந்த நிலை அகன்று, உடல் எடையும் குறைந்து,மேனியும் தூய்மையாகி வித்தியாசமான மாற்றத்தை உணரலாம்.இத்தகைய மாற்றங்கள் உங்களது பல பிரச்சனைகளை தீர்த்துவிடும்.

சாப்பாட்டுக்கு பின் இனிப்பு

நம்மில் பலருக்கு சாப்பிட்டவுடன் குறைந்தபட்சம் ஒரு கடலை மிட்டாயையாவது சாப்பிடும் பழக்கம் இருக்கிறது.இவ்வாறு சாப்பாட்டுக்கு பின்னர் ஸ்வீட் எடுத்துக்கொள்ளும் பழக்கம் முற்றிலும் அநாவசியமான ஒன்று என்பதே நிபுணர்களின் வாதம்.எடுத்துக்கொள்ளும் உணவே சர்க்கரை சத்தாகத்தான்-குளுகோஸ்- மாற்றம்பெற்று உடலுக்கு தேவையான சக்தியை அளிக்க தொடங்குகிறது.அப்படி இருக்கையில் மேலும் ஸ்வீட் எடுத்துக்கொண்டு சர்க்கரை அளவை கூட்டுவது உடல் எடையை அதிகரிக்கத்தான் வழி வகுக்கும்.எனவே அந்த பழக்கத்தை குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு கைவிட்டு பார்த்தாலே அதன் பலனை உணர்ந்து, நீங்கள அப்பழக்கத்தை அடியோடு தலைமுழுகி விடுவீர்கள்.

Advertisement

அதிக கார்போஹைட்ரேட்

மதிய உணவுக்கும், இரவு உணவுக்குமான இடைவெளியில் மாலை நேர சிற்றுண்டிகளாக நம்மில் பலர் சமோசா, சாண்ட்விச் என பலமாக உள்ளே தள்ளுவார்கள். அது சரியா அல்லது தவறா என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல் இவ்வாறு தினமும் வயிற்றுக்குள் தள்ளப்படும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், உடல் எடையை ஏகமாக அதிகரிக்க செய்துவிடும்.

Advertisement

இத்தகைய உணவுகளுக்கு பதிலாக ஆரோக்கியமான புரதச் சத்து நிறைந்த கொட்டை பருப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.இதனால் பசி உணர்வு தடுக்கப்பட்டு அதிக அளவு கார்போஹைட்ரேட் வகையறா உணவுகள் எடுத்துக்கொள்ளப்படுவது தவிர்க்கப்படும்.

உருளைக்கிழங்கு

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றாக, உடல் எடையை அதிகப்படுத்தும் உணவுகளில் ஒன்றாக உருளைக் கிழங்கை பட்டியலிட்டுள்ளனர்.இந்த உருளைக்கிழங்கை நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அது நிச்சயம் உடல் எடையை கூட்டிவிடும்.அதற்குப் பதிலாக பச்சை காயகறிகளை எடுத்துக்கொள்ளலாம்.

நொறுக்கு தீனிகள்

ஆரோக்கியமான நொறுக்கு தீனிகள் என்ற பெயரில் அதன் விபரீதம் புரியாமலேயே பலர் சிப்ஸ், முறுக்கு,பேக்கரி அயிட்டங்கள் என விதவிதமாக உள்ளே தள்ளுகின்றனர்.இவையெல்லாம் லைட்ட்டான உணவு வகைகள்.உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதோடு உடலுக்கு சத்தானது என்றும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இந்த எண்ணம் தவறானது.அதிக அளவில் எண்ணெயில் பொறிக்கப்பட்ட இத்தகைய உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

24 நிமிடங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

1 மணி நேரம் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

3 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

4 மணி நேரங்கள் ago

ருசியான சிறு தானிய சப்பாத்தி இப்படி ட்ரை பண்ணி பாருங்க எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க!

சிறு தானிய வகைகளில் ஒன்றாக இருக்கும் இந்த கம்பு நிறையவே சத்துக்களை கொண்டுள்ளது. குறிப்பாக நார்ச்சத்து நிறைந்துள்ள இந்த கம்பு…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 14 மே 2024!

மேஷம் நீங்கள் முன்னெடுக்கும் பணிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானமும் அதிகரிக்கும். யாருடனும் வாக்குவாதம்…

8 மணி நேரங்கள் ago