Advertisement
சைவம்

கோதுமை மாவு இருந்தால் பூ போன்ற இடியாப்பம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க அவ்வளவு தான் டிபன் ரெடி!

Advertisement

தென்னிந்தியாவின் பாரம்பரிய செய்முறையான கோதுமை இடியாப்பம் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு ஆகும்.கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஈசியாக

இதையும் படியுங்கள்: மண்மணக்கும் மதுரை ஸ்டைல் மசாலா இடியாப்பம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கோதுமை மாவு இடியாப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த கோதுமை மாவு இடியாப்பம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கோதுமை மாவு இடியாப்பம் | Wheat Mavu Idiyappam Recipe in Tamil

Print Recipe
தென்னிந்தியாவின் பாரம்பரிய செய்முறையான கோதுமை இடியாப்பம் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு ஆகும்.கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கோதுமை மாவு இடியாப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner
Cuisine Indian, TAMIL
Keyword Wheat Mavu Idiyappam, கோதுமை மாவு இடியாப்பம்
Prep Time 15 minutes
Cook Time 18 minutes
Total Time 33 minutes
Servings 4 People
Calories 649

Equipment

  •  இட்லி பாத்திரம்
  •  பெரிய தட்டு

Ingredients

  • 2 cup கோதுமை மாவு
  • 1 cup சர்க்கரை
  • 1 cup தேங்காய் பூ
  • 1 tsp ஏலப்பொடி
  • தேவையான அளவு உப்பு                             
    Advertisement
  • தேவையான அளவு தண்ணீர்                     

Instructions

  • கோதுமை மாவு இடியாப்பம் செய்ய முதலில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கோதுமை மாவை அப்படியே ஒரு துணியில் முடிந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல் அவிக்கவும். சுமார் 20 நிமிடங்களுக்கு அவித்து எடுக்கவும்.
  • அந்த மாவை ஒரு தட்டில் கொட்டி சூடாக இருக்கும்போதே உதிர்த்துவிட்டு உள்ளங்கைகளால் புட்டு மாவு பிசைவது மாதிரி செய்தால் பொலபொலவென மாவு உதிர்ந்துகொள்ளும். தேவையான உப்பை சேர்க்கவும். 
  • இப்போது கை பொறுக்கும் சூட்டில் தண்ணீர் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மாவில் தெளித்து கெட்டியாக இடியாப்பம் பிழியும் பதத்திற்கு பிசையவும். 
  • ஒரேயடியாக தண்ணீர் ஊற்றி பிசைய வேண்டாம்.மீண்டும் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றவும். இடியாப்ப அச்சில் மாவை நிரப்பிக்கொள்ளவும்.
  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இட்லி தட்டில் ஈரத்துணியைப் போட்டு அதில் இடியாப்பத்தை பிழிந்து இட்லி அவிப்பதுபோல் அவித்து எடுக்கவும். சுவையான கோதுமை இடியாப்பம் தயார்.

Nutrition

Serving: 400gm | Calories: 649kcal | Carbohydrates: 31g | Sodium: 354mg | Potassium: 243mg | Sugar: 6.9g | Calcium: 64mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

2 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

12 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

13 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

15 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

19 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

20 மணி நேரங்கள் ago