- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
இந்தியர்களின் உணவு பழக்கங்களில் பிரியாணி தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது. உணவு வகைகளில் பிரியாணியை மக்கள் அதிகமாக விரும்பி சாப்பிட தொடங்கி விட்டனர். உணவு பிரியர்கள் மட்டுமின்றி இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் உணவாக இருக்கிறது. தென்னிந்தியாவில் பிரியாணிக்கு என்று ஒரு தனி கூட்டம் உண்டு என்றால் அது மிகை அல்ல. குறிப்பாக சனி, ஞாயிறுகளில் மக்கள் தங்கள் வீடுகளில் பிரியாணியை அதிகமாக செய்து சாப்பிடுகின்றனர். நம்மில் பலருக்கு பிரியாணி என்ற பெயரை கேட்டதும் நாவில் எச்சில் ஊறும். ஏனென்றால், மக்களில் 90 சதவீதம் பிரியாணி பிரியர்கள் என்று கூறினால் அதில் எந்த சந்தேகமும் இல்லை.
சமீப காலமாக பிரியாணி பிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகின்றது. பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுவதால் நம்முடைய வீடுகளில் ஞாயிற்று கிழமைகளில் பிரியாணி அதிகம் சமைக்கப்படுவதுண்டு. பிரியாணியில் பலவகை உண்டு. பிரியாணிகளில் மட்டன், சிக்கன், மீன், வெஜ், இறால், நண்டு என பல்வேறு வகையான பிரியாணிகள் செய்யப்படுகின்றன. எப்பவும் மட்டன், சிக்கன், மீன் என ஒரே மாதிரியான பிரியாணி செய்து சலித்து போய்விட்டதா? அப்படியானால் இந்த கொங்குநாடு வெள்ளை மட்டன் பிரியாணி செய்து பாருங்கள்.
பார்ப்பதற்கு வெள்ளையாக இருந்தாலும், சுவையில் சுண்டியிழுக்கும். இந்த பிரியாணியின் சுவை அனைவரையும் அடிமையாக்கி விடும். இதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். அன்றாட செய்யும் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என செய்யாமல் இந்த வித்யாசமான வெள்ளை மட்டன் பிரியாணி செய்து பாருங்கள். இந்த பிரியாணியை வீட்டில் முயற்சித்தால், வீட்டில் உள்ளோரின் பாராட்டைப் பெறலாம். முக்கியமாக இந்த ரெசிபி பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும். வாருங்கள் சுவையான வெள்ளை மட்டன் பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் மட்டன் குழம்பு
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இந்த விழுதை துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மட்டனுடன் சேர்த்து நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் பிரியாணி இலை, அன்னாசி பூ, பட்டை, கல்பாசி, கருப்பு ஏலக்காய், மராத்தி மொக்கு, சீரகம், மிளகு, சோம்பு சேர்த்து வதக்கவும்.
பின் நறுக்கி வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் ஊற வைத்துள்ள மட்டனை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்.
பின் குக்கரை திறந்து ஊறவைத்த அரிசியை சேர்த்து நன்கு கலந்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான வெள்ளை மட்டன் பிரியாணி தயார்.






