நமக்கு ஏதாவது கஷ்டங்கள் வரும்போது அதிலிருந்து நாம் வெளியே வருவதற்கு தெய்வத்தை தான் வணங்குவோம். தெய்வங்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்யும்போது அதற்கான பலன்கள் நமக்கு கிடைக்கும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான நேரங்கள் மிகவும் உகந்த நேரங்களாக உள்ளது. அந்த நேரங்களில் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வம் நமக்கு அதிகப்படியான பலன்களை வாரி வழங்குவார்கள். அந்த வகையில் நாம் எடுக்கக்கூடிய முயற்சிகள் கடைசி நேரத்தில் தோல்வி அடைந்து விட்டது எவ்வளவு முயற்சி செய்தும் வெற்றி அடையவில்லை என்று வருத்தப்படுவார்கள். அவர்களுடைய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்பட வேண்டும் என்பதற்காக விநாயகப் பெருமானை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படிப்பட்ட நேரத்தையும் வழிபாடு செய்ய வேண்டிய முறையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

காரிய தடையை நீக்க கூடியவர்
விநாயகப் பெருமான் காரிய தடைகளை நீக்க கூடியவர் எந்த ஒரு காரியத்தை தொடங்குவதற்கு முன்பாகவும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். ஒரு சிலர் முக்கியமான காரியத்திற்கு செல்லும்போது விநாயகர் பெருமானுக்கு தேங்காய் உடைத்து விட்டு போவார்கள். அப்பொழுது அந்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலகும் எவ்வளவு முயற்சி செய்தும் கடைசி நேரத்தில் அந்த முயற்சி தோல்வியை சந்திக்கும் போது அதனால் நமக்கு வருத்தம் ஏற்படும். அப்படி கடைசி நேரத்தில் தட்டிப் போகக்கூடிய பலவிதமான காரியங்களையும் கூட விநாயகப் பெருமான் சரி செய்வார்.
காரியத்தடையை நீக்க செய்ய வேண்டிய வழிபாடு
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று செய்வது நல்லது. எமகண்ட நேரத்தில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் காரிய தடைகள் அனைத்தும் நீங்கும். வெள்ளிக்கிழமை எமகண்ட நேரம் என்பது பகல் 3 மணியில் இருந்து 4:30 மணிக்குள் வரும். இந்த நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் கோவிலுக்கு சென்று பெரிய கட்டி கற்பூரத்தை ஏற்றி வைத்து ஒரு தேங்காயை கையில் வைத்துக் கொண்டு விநாயகப் பெருமானிடம் மனதார வழிபாடு செய்ய வேண்டும். காரிய தடைகள் நீங்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன் தேங்காயை சிதறு தேங்காயாக உடைக்க வேண்டும். இந்த முறையில் நாம் வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயமாக தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் தொடர்ச்சியாக இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். முழு மனதோடு நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை மேற்கொள்வது மிகச் சிறப்பானது.
இதனையும் படியுங்கள் : குழந்தைகள் படிப்பதற்கு விநாயகர் பரிகாரம்




