தை மாதம் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை ஞாயிற்றுக்கிழமை என அனைத்து நாட்களுமே அம்பாளுக்கு உரிய நாட்கள் தான். வீட்டில் சுப காரிய தடைகள் இருக்கிறது என்றால் வீட்டில் உள்ள பெண்கள் அதற்காக வழிபாடு செய்ய வேண்டும். ஒரு சில வீட்டில் கணவர் சரியாக குடும்பத்தை கவனித்துக் கொள்ளாமல் வேலைக்கு செல்லாமல் இருப்பார்கள் மேலும் கணவருக்கு ஏதாவது உடல் பாதைகளும் ஏற்படும். இந்த சமயத்தில் பெண்களுடைய வாழ்க்கை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாகி இருக்கும் குடும்பத்தில் நிம்மதி கெட்டுப் போக கணவர் காரணமாக இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்க வேண்டும் மாங்கல்ய பலமும் பெற வேண்டும். கணவரிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அனைத்தும் நீங்க வேண்டும் வீட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் நீங்க வேண்டும் என்றால் வீட்டில் உள்ள பெண்கள் இந்த குறிப்பிட்ட பரிகாரத்தை அம்மன் வழிபாட்டை தொடர்ந்து செய்து வரலாம் அதனைப் பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

தை மாத வழிபாடு
தை மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை கூட இந்த பூஜையை அம்பாளை நினைத்து செய்யலாம். பூஜை அறையை முதலில் அலங்காரம் செய்து அம்மனுக்கு பிடித்தமான வாசனையான பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். வீட்டில் அவனுடைய திருவுருவப்படம் அல்லது சிலை இருந்தால் அதற்கு மல்லிகை பூ செவ்வரளி பூ போன்ற வாசம் நிறைந்த பூக்களை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
வழிபாடு செய்ய வேண்டிய முறை
ஒரு தாம்பூல தட்டில் பூ பழம் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் கண்மை மருதாணி சீப்பு மஞ்சள் கயிறு புடவை ரவிக்கை துணி என அவரவர் வசதிகளுக்கு ஏற்ப பொருட்களை எல்லாம் வாங்கி தட்டில் வைத்து அம்பாளுக்கு முன்பாக வைத்து ஒரு விளக்கு ஏற்றி ஏதாவது ஒரு இனிப்பை வீரியமாக வைத்து வீட்டில் சாம்பிராணி தூபம் போட வேண்டும். மனதில் இருக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் அம்மனிடம் மனம் உருகி கூறவேண்டும். குலதெய்வத்தையும் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பெண்கள் இந்த பூஜையை செய்வது மிக மிக சிறப்பானது உங்களுடைய கணவருக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சனை சரியாகும்.
அம்பாளுக்கு அர்ச்சனை
பிறகு “ஓம் க்ரீம் தேவியை நமஹ” என்ற மந்திரத்தை சொல்லி அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு வெற்றிலையின் மேல் குங்குமத்தை போட்டு அர்ச்சனை செய்து அந்த குங்குமத்தை ஒரு டப்பாவில் போட்டு தினமும் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த குங்குமத்தை உங்களுக்கு தெரிந்த மற்ற பெண்களுக்கும் கொடுக்கலாம். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். கட்டில் வாங்கி வைத்துள்ள பொருட்களை எல்லாம் ஏழை பெண்ணுக்கு தானமாக கொடுக்கலாம் திருமணமான பெண்களுக்கும் திருமணமாகாத பெண்களுக்கும் கொடுக்கலாம். அம்மன் கோவிலில் இந்த பூஜையை நீங்கள் செய்தால் கோவிலிலேயே ஏதாவது ஒரு பொண்ணுக்கு தானமாக கொடுப்பது நல்லது தை மாதம் முடிவதற்குள் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்து குடும்பத்தை சுபிட்சம் பெற வைக்கலாம். வீட்டில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் போக்க வைக்கலாம். முழு மனதோடு அம்பாளை நினைத்து அம்பாளுக்காக இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
இதனையும் படியுங்கள் : தரித்திரம் நீங்க தை மாத மகாலட்சுமி வழிபாடு!!




