ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் தங்களுடைய ராசியில் எந்தெந்த அமைப்பில் நவகிரகங்கள் இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு வழிபாடுகளையும் செய்யலாம். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் தொழில் ரீதியான முன்னேற்றம் உண்டாவதற்கும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்து பார்க்கலாம்.

நவகிரகங்களின் அருள்
செய்யக்கூடிய வியாபாரங்கள் தொழில் அனைத்தும் சிறப்பாக விளங்குவதற்கு கடின முயற்சிகள் தேவைப்படும். அதேசமயம் நவகிரகங்களின் அருளும் தேவைப்படும். அப்படி இரண்டுமே கிடைத்துவிட்டால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் மேலும் வேலை தொழில் அனைத்திலும் முன்னேற்றம் கிடைக்கும்.
சனீஸ்வர பகவான் வழிபாடு
பொதுவாகவே தடைகள் என்றால் நினைவிற்கு வரக்கூடிய நவகிரகங்களில் ஒன்று தான் சனீஸ்வர பகவான். சனீஸ்வர பகவான் தொழிலில் வியாபாரத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியவர். சனீஸ்வர பகவானுக்கு எள் தீபம் ஏற்றி ஒரு சிலர் வழிபாடு செய்வார்கள். தொழிலில் வேலையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் சரியாக சனீஸ்வர பகவானை வியாழக்கிழமை வழிபாடு செய்வது மிகவும் நல்லது.
குரு பகவான் மற்றும் சனீஸ்வர பகவான் வழிபாடு
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உரிய கிழமையாக உள்ளது. குரு பகவானின் அருள் இருக்கும் பட்சத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். வியாழக்கிழமை என்று இரவு ஏழு மணியில் இருந்து எட்டு மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய பாரம்பரியமான பழங்கால கோவிலுக்கு சென்று அங்கு நவகிரகங்களில் இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு இந்த தீபத்தை ஏற்றினால் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
தீப வழிபாடு
சனீஸ்வர பகவானுக்கு மேற்கு மூலையில் கிழக்கு பார்த்தவாறு இரண்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். அதிகப்படியான பிரச்சினைகள் இருந்தால் சனீஸ்வர பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நிச்சயமாக உங்களுக்கு பிரச்சனைகளை சரி செய்து கொடுக்கும். சனீஸ்வர பகவானின் அருளாலும் குரு பகவானின் அருளாலும் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும். தொழில் மற்றும் வேலையில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். மேலும் நவகிரகங்களின் அருளையும் பெற முடியும். முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : பிரச்சனைகளை தீர்க்கக் கூடிய அரச இலை பரிகாரம்!!




