Advertisement
சைவம்

ருசியான கருணைகிழங்கு தவா வறுவல்! இது தெரிஞ்சா இனி கருணைக்கிழங்கு வாங்கினாலே இப்படித்தான் செய்வீங்க!

Advertisement

கருணைக்கிழங்குகள் ரொம்பவே கருணை உள்ள கிழங்குகள் தான். இதுல அதிக அளவு சத்துக்கள் இருக்கு இந்த கருணைக்கிழங்கு ரொம்பவே அதிக அளவு உடலுக்கு ஊட்டச்சத்து கொடுக்க கூடிய ஒரு கிழங்கு வகை. இந்த கருணைக்கிழங்கு ரொம்பவே ருசியா எப்பவும் புளிக்குழம்பு, சாம்பார், மசியல் இந்த மாதிரி நிறைய செய்து சாப்பிட்டு இருப்போம்.

வித்தியாசமான தவா வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த வறுவல் ரொம்பவே ருசியா இருக்கும். எப்போதும் இருக்கிற கருணைக்கிழங்கு வறுவல் மாதிரி இல்லாம வித்தியாசமான சுவைல இருக்கும் இந்த தவா வறுவல். எப்பவுமே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு செய்து ஒரே மாதிரியான வறுவல் சாப்பிட்டு போர் அடிச்சு போய் இருக்கா அப்போ கருணைக்கிழங்கு இந்த மாதிரி தவா வறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க.

Advertisement

இது உங்க எல்லாருக்குமே பிடிக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாருமே விருப்பப்பட்டு சாப்பிடுவாங்க. இந்த கருணைக்கிழங்கு  நினைச்சாலே எல்லாருக்கும் வர பயம் ஒன்னே ஒன்னு தான் அதோட அரிப்பு தன்மை. இந்த கருணைக்கிழங்கு அரிப்பு இல்லாம செய்யறது ரொம்பவே சுலபம். அப்படி தான் நம்ம கருணைக்கிழங்கு செய்து சாப்பிட போறோம். இந்த ருசியான கருணைக்கிழங்கு வறுவல் எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.

கருணைகிழங்கு தவா வறுவல் | Yam Tawa Fry In Tamil

Print Recipe
வித்தியாசமான தவா வறுவல் எப்படி செய்வது என்று பார்க்க போறோம். இந்த வறுவல் ரொம்பவே ருசியா இருக்கும்.எப்போதும் இருக்கிற கருணைக்கிழங்கு வறுவல் மாதிரி இல்லாம வித்தியாசமான சுவைல இருக்கும்இந்த தவா வறுவல். எப்பவுமே உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு செய்து ஒரே மாதிரியானவறுவல் சாப்பிட்டு போர்
Advertisement
அடிச்சு போய் இருக்கா அப்போ கருணைக்கிழங்கு இந்த மாதிரி தவாவறுவல் செய்து சாப்பிட்டு பாருங்க. இந்த ருசியான கருணைக்கிழங்கு வறுவல் எப்படி பண்ணலாம் அப்படின்னு பார்க்கலாம்.
Course Fry
Cuisine tamilnadu
Keyword Yam Tawa Fry
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 112

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1/4 கிலோ கருணைகிழங்கு
  • 1 கப் புளி கரைசல்
  • 1 ஸ்பூன் சோளமாவு
  • 1 கப் சின்ன வெங்காயம்
  • 1 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 துண்டு இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை

Instructions

  • முதலில் கருணைக்கிழங்கை தோல் சீவி விட்டு  கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கருணைக்கிழங்கு, புளிக்கரைசல், மஞ்சள்தூள்,சிறிதளவு உப்பு சேர்த்து முக்கால் பதம் வேக வைக்கவும்.
  • கருணைக்கிழங்கு முக்கால் பதம் வெந்த பிறகு அதை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கருணைகிழங்கில் சோளமாவு, சிறிது  உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
  •  பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம்,இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு அதில் சீரகம், மிளகு, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  இதை நன்றாக வதங்கிய பிறகு அதை அடுப்பை நிறுத்தி விட்டுஅந்த சூட்டில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். வதக்கிய பொருள்கள் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி மசாலா தடவிய கருணைகிழங்கை இரண்டு புறமும் திருப்பி போட்டு வேகவைத்து  பரிமாறினால் சுவையான கருணைகிழங்கு தவாவறுவல் தயார்.

Nutrition

Serving: 250g | Calories: 112kcal | Carbohydrates: 9g | Protein: 1.2g | Sugar: 1g

இதையும் படியுங்கள் : சூப்பரான சேனைக்கிழங்கு பொடிமாஸ், சேனைக்கிழங்கை இப்படியும் பொடிமாஸ் செய்து சாப்பிடலாம், ருசி நாக்கிலேயே நிற்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

4 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

15 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

21 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

24 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago