Advertisement
Uncategorized

அம்மாவாசை காகத்திற்கு படைக்க வாழைக்காய் கறி எப்படி செய்வது ? ஏன் படைக்கிறோம் ?

Advertisement

பொதுவாக நம்மில் பலரும் அம்மாவாசை தினம் அது ஒரு கெட்ட நாள் என்றும் அன்றைய தினம் மோசமான விஷயங்கள் நடக்கும் எனவும் கருதுகின்றாம். இருந்தாலும் அமாவாசை போல் கடவுள் வழிபாடு செய்வதற்கு உகந்த நாள் வேறு நாளில்லை, அம்மன் வழிபாடு செய்வதற்கு இன்னாள் மிகவும் உகந்த நாள். அது போன்று அமாவாசை தினங்களில் நாம் முன்னோர்களை மனதில் நினைத்து அன்று நாம் சமைக்கும் உணவை காகங்களுக்கு படைத்து வருவோம். அப்படி நாம் படைக்கும் உணவுகளில் கிழங்கு, காய், கீரை என மூன்று பொருள்களும் இடம் பெற்று இருக்கும்.

இப்படி நாம் படைக்கும் உணவுகளில் முக்கியமானது வாழைக்காய் தான், ஏனெனில் நம் குலம் வாழையடி வாழையாக வாழ வேண்டுமென பலர் சொல்லிக் கேட்டு இருப்பீர்கள். அதற்காக அதுபோல் நம் குலமும், சந்ததிகளும், தழைத்து வாழ வேண்டும் என்பதற்காக அமாவாசை நாட்களில் காகங்களுக்கு படைக்க வாழக்காய் கறி எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 4
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

தாளிக்க

மஞ்சள் பொடி – அரை டீஸ்பூன்
கடுகு – 1 டிஸ்பூன்
கருவேப்பிலை – ஒர கொத்து
உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 4 டீஸ்பூன்

பொடி செய்ய

மல்லி விதை – 3 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
கடலை பருப்பு – 2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்
பெருங்காய கட்டி – சிறு துண்டு
எண்ணெய் – 2 டீஸ்பூன்

செய்முறை

1) முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 டீஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணய் காய்ந்ததும் அதில் நாம் வைத்திருக்கும் பெருங்காயம், மல்லி விதை, கடலைப்பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு சிவக்கும் வரை வறுத்துக்கொள்ளுங்கள்.

2) பொருள்கள் நன்கு

Advertisement
வறுபட்டு வந்ததும் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காய் துருவலையும் சேர்த்து கொள்ளவும். பின் தேங்காய் நன்கு வறுபடும் வரை வறுத்து எடுத்து கடாயை இறக்கி கொள்ளுங்கள். பின் அனைத்து பொருட்களும் நன்கு குளிர்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

3) அதன் பின்பு நாம் வைத்திருக்கும் நான்கு வாழைக்காய் தோல்களை நீக்கி விட்டு. சற்று பெரிய

Advertisement
பெரிய துண்டுகளாக வெட்டி கொண்டு. பின் அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து. அதனுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து பின் வாழைக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

4) தண்ணீர் நன்கு கொதித்து வாழைக்காய் வெந்து வந்தவுடன் நீரை வடிகட்டி வாழைக்காயை தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு கனமான ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை, உளுந்தம் பருப்பு போன்ற பொருட்களை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

5) பின் தாளிப்பு முடிந்தவுடன் அதனுடன் நாம் வேக வைத்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்பு தீயை மிதமாக எரிய விட்டு ஒரு பத்து நிமிடங்கள் வாழக்காயை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

6) பின்பு நாம் முதலில் பொடித்து வைத்திருக்கும் பொடியையும சேர்த்து ஒரு ஐந்து நிமிடங்கள் வரை வாழைக்காயை வதக்கி பின் கடாயை இறக்கி விடுங்கள். அவ்வளவுதான் இதை நீங்கள் காகங்களுக்கு படைக்கலாம்.

Advertisement
Prem Kumar

Recent Posts

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

31 நிமிடங்கள் ago

ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக…

2 மணி நேரங்கள் ago

சாக்லேட் மில்க் குளுகுளுன்னு இப்படி ஒரு தடவை செஞ்சு குடிச்சு பாருங்க!

சாக்லேட் லவ்வரா இருக்கிற எல்லாருக்குமே சாக்லேட் ஐஸ்கிரீம் சாக்லேட் கேக் சாக்லேட் ஐஸ்கிரீம் அப்படின்னு சாக்லேட் சம்மந்தமான எல்லாம் ரொம்ப…

3 மணி நேரங்கள் ago

ரிஷப ராசியில் சூரியன் மற்றும் குருவின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் சிலர் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் மற்றும் குரு பகவான் 12 ஆண்டுகளுக்கு பிறகு ரிஷப ராசியில் சேர்கிறார்கள். 2024 வது…

4 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!

காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? அப்படியானால் உப்புமா செய்து சாப்பிடுங்கள். உப்புமா என்றதும் வெள்ளை ரவை அல்லது…

6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 11மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு சாதகமான பலன் தரக்கூடிய நாள். பயணங்கள் மூலம் சில அனுகூல பலன்களை பெறுவீர்கள். ஒட்டிய பக்தர்கள்…

9 மணி நேரங்கள் ago