2025 தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்!!

- Advertisement -

மேஷம்

விசுவாவசு தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித வெற்றிகளை அள்ளித் தரும். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தடைகள் அனைத்தும் நீங்கி நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் நிறைவடையும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசியல் வாதிகளுக்கு எதிர்ப்பார்த்த பொறுப்பும் பதவியும் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள், எதிர்ப்புகள் விலகும். உடல்நிலை சீராகும், வழக்கு விவகாரம் சாதகமாகும். இதுவரையில் குடும்பத்திற்கும் உங்களுக்கும் ஏற்பட்ட இடைவெளி இனி மறையும்.

-விளம்பரம்-

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு பலவித நல்ல செய்திகளை கொண்டு வர உள்ளது. வணிகத்தில் அபரிவிதமான லாபம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவடையும். தொழிலில் லாபம் உண்டாகும். பொருளாதாரம், செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு வந்து சேரும். தொழில், வேலையில் இருந்த நெருக்கடி நீங்கும். வருவாய் அதிகரிக்கும். பொருளாதாரம் உயரும். வெளிநாட்டு முயற்சி வெற்றியாகும். அரசு ஊழியர்களின் மதிப்பை அதிகரிக்கும். எதிரி தொல்லையில் இருந்து விடுவீர்கள். மற்றவர் விவகாரங்களில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

மிதுனம்

விசுவாவசு தமிழ் புத்தாண்டு தொடங்கிய உடனேயே நிகழவுள்ள குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். உத்தியோகத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். சமூகத்தில் உயர்வு உண்டாகும். இழந்த சொத்து, செல்வாக்கை அடையும் நிலை ஏற்படும். நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். திருமண வயதினருக்கு வரன் வரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கடகம்

விசுவாவசு தமிழ் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். செலவுகள் மீது கட்டுப்பாடு இருப்பது அவசியம். ஆண்டின் இரண்டாவது பகுதியில் பணியிடத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். தகுதிக்கேற்ற பொறுப்பு, பதவி உயர்வு ஏற்படும். பிறரால் முடியாததையும் முடித்துக் காட்டுவீர்கள். தொழில் தொடங்குவதற்கு எதிர்பார்த்த பணம் வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கியவர்களின் கனவு நனவாகும். அரசு ஊழியருக்கு விரும்பிய இடமாற்றம், பணி உயர்வு கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம்

விசுவாவசு ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்களை அளிக்கும். இந்த ஆண்டில் அதிக லாபம் உண்டாகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளவர்கள் இந்த ஆண்டு அந்த நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு அலைச்சல் அதிகரிக்கும். வேண்டாத நண்பர்களால் சங்கடம் உருவாகும். கூட்டுத் தொழிலில் நெருக்கடி அதிகரிக்கும். நண்பர்கள் விலகும் நிலை உருவாகும். குடும்பத்தில் பிரச்னை, மனதில் குழப்பம் நீடிக்கும். அதனால் கவனமாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வந்து சேரும்.

-விளம்பரம்-

கன்னி

தமிழ் புத்தாண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள். பண வரவு அதிகமாகும். அபார ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடக்கும். குடும்பத்தில் பிரச்னை அதிகரிக்கும். தம்பதிக்குள் ஒற்றுமை இல்லாமல் போகும். அதனால் ஒருவரொருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதினருக்கு வரன் வரும். வேலை தேடி வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

துலாம்

விசுவாவசு ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். அரசு தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதலும் அன்பும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல்பலமும், தொழிலில் முன்னேற்றமும், வழக்கில் சாதகமான நிலையும், எதிரியை வீழ்த்தும் வலிமையும் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றியும் உண்டாகும். பணவரவில் இருந்த தடை விலகும். பல வழிகளில் பணம் வரும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும். தெய்வீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்

தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றிகளை கொண்டுவரும். மே மாதம் நடக்கவுள்ள ராகு பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பம், தொழில், பணியில் இருந்த நெருக்கடி விலகும். சிலர் புதிய தொழில் தொடங்குவர். புது வீடு கட்டி குடியேறுவர். வருமானம் பலவழியிலும் வரும். வேலைக்காக முயற்சித்தவர்களின் விருப்பம் நிறைவேறும். உடல், மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். தொழில், வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.

-விளம்பரம்-

தனுசு

தமிழ் புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். இந்த ஆண்டில் பெரிய முடிவுகளை எடுக்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வார்த்தையில் பொறுமையும் நிதானமும் அவசியம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகும். வேலைத் தேடுவோருக்கு வேலை அமையும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, எதிர்பார்த்த இட மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்த்த பொறுப்பு, பதவி வரும். தாய்வழி உறவுகளுடன் வீண் பிரச்னைகள் ஏற்படும்.

மகரம்

தமிழ் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு அனைத்து வித செல்வங்களையும் அள்ளித் தரும். பொன், பொருள் சேரும் காலம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நினைத்த செயல்களில் வெற்றி காண்பீர்கள். இழந்தவற்றை மீட்கும் ஆற்றல், சொத்து சேர்க்கை என ஆதாயம் உண்டாகும். வெளிநாட்டு தொடர்பு, ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரம் ஆதாயத்தை உண்டாக்கும். புதிய சொத்து சேரும். தொழிலில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் பிரச்னைகள் விலகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும்.

கும்பம்

தமிழ் புத்தாண்டில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி போன்ற கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகள் நடக்கும். இந்த ஆண்டு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வேலையில் முன்னேற்றம் தோன்றும். சிலருக்கு உடல்நலனில் பாதிப்பு, உறவினரால் சங்கடம், வெளியூர் செல்லும் நிலை, நெருக்கடி உண்டாகும். சிலருக்கு நினைத்ததை நடத்திக் கொள்ள முடியும். குடும்பம், தொழில், பணியில் நன்மை அதிகரிக்கும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். உடல்நிலை சீராகும். அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி எந்தவொரு செயலிலும் இறங்க வேண்டாம்.

மீனம்

விசுவாவசு ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு வலுவான வருமான பலன்களை அளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத நெருக்கடி, தொழிலில் பிரச்னை, குழப்பம், வாழ்க்கைத்துணையுடன் சங்கடம் ஏற்படும். எந்த செயலிலும் நிதானம் அவசியம். பண ஆசையால் தவறான வழியில் செல்லும் நிலை சிலருக்கு உருவாகும். சிலருக்கு முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.

இதனையும் படியுங்கள் : 2025ல் ஒரு சில ராசிகளுக்கான சனி பெயர்ச்சி பரிகாரம்!!