வாழ்க்கையை அனுபவித்து ரசித்து ஒரு சிலர் மட்டுமே வாழ்வார்கள். பணம் இருப்பவர்கள் மட்டும் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது தவறான கருத்து பணம் இல்லாமலும் இந்த வாழ்க்கையை சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம். அடுத்தவர்களை பார்த்து பொறாமை படாமல் அடுத்தவர்களிடத்தில் இருக்கும் பொருட்களுக்கு ஆசைப்படாமல் நம்மிடம் இருப்பதை வைத்து நல்ல வாழ்க்கையை திருப்தியாக வாழ முடியும்.

அடுத்தவர்களுடன் ஒப்பிடாத வாழ்க்கை
ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கடந்து போக வேண்டும். இருக்கக்கூடிய இன்ப துன்பங்களை எல்லாம் சமாளித்து நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் அடுத்தவர்களுடன் ஒப்பிட்ட என்றுமே நாம் வாழ்க்கையை வாழக்கூடாது. இது குடும்ப மகிழ்ச்சியை அழித்துவிடும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து வாழ வேண்டும் எப்பொழுதுமே சிரித்துக் கொண்டே வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டும். அப்படி சிரித்துக்கொண்டே புன்னகையோடு தினமும் நீங்கள் இந்த அழகான மந்திரத்தை கூறி வந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கை அழகானதாகவே மாறிவிடும்.
வாழ்க்கையில் நல்லது நடக்க சொல்ல வேண்டிய வார்த்தை
“நற்பவி, நற்பவி, நற்பவி” என்ற வார்த்தையை சொல்லும்போது மனதிற்குள் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். மிகவும் சோகமாக இருக்கும் போது இந்த வார்த்தையை சொன்னால் அனைத்து சோகமும் காணாமல் போய்விடும். நற்பவி என்ற வார்த்தைக்கு சிறப்பு வாய்ந்த மகிமை இருக்கிறது இந்த வார்த்தைக்கு நீங்கள் தனியாக உச்சரிக்காமல் சிவ மந்திரத்தோடு சேர்த்து உச்சரிக்க வேண்டும்.
வாழ்க்கையில் நல்லது நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்
“நற்பவி நற்பவி, நற்பவி ஓம் ஓம் சக்தி ஓம்,சக்தி சிவ சக்தி ஓம்”இந்த முறையில் கற்பவி மந்திரத்தை நீங்கள் சொன்னால் சிவனும் சக்தியும் சேர்ந்து உங்களுக்கு ஆசியை வழங்குவார்கள். தினந்தோறும் காலையில் குளித்துவிட்டு இந்த மந்திரத்தை சொல்லலாம் ஆனால் குளித்துவிட்டு தான் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்த மந்திரத்தை சொல்வதால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும் நீங்களும் பெரிய செல்வாக்கு உள்ளவர்களாக மாறுவீர்கள். நன்றாக வாழ்ந்தவர்கள் திடீரென பிரச்சனையோடு இருப்பார்கள் அவர்கள் எல்லாம் இந்த மந்திரத்தை சொல்வது நல்லது. எதிர்பாராத கஷ்டங்கள் வரும்போது நம்முடைய மனது அதனை ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அந்த சமயத்தில் நாம் மிகவும் உறுதியோடு இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாழ்க்கை நமக்கு ஒரு தென்பு கிடைக்கும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து விடலாம் என்ற நம்பிக்கையும் பிறக்கும் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த நற்பவி மந்திரத்தை நிச்சயமாக சொல்லி பயன்பெறுங்கள்.
இதனையும் படியுங்கள் : தினமும் அரை மணி நேரம் இந்த மந்திரம் சொன்னால் மட்டும் போதும் பணம் தானாகவே வீடு தேடி வரும்!




