ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் நம் வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்றால் இஷ்ட தெய்வம் மற்றும் குலதெய்வத்தின் அருள் நமக்கு வேண்டும். மேலும் அவர்களிடத்தில் நாம் அதற்கான கோரிக்கையையும் வைப்போம். அப்படி கோரிக்கை வைக்கும் பட்சத்தில் நீண்ட நாட்களாக எந்த விடும் முன்னேற்றமும் இல்லை என்றால் விநாயகப் பெருமானுக்கு இந்த குறிப்பிட்ட நாளில் ஒரு பொருளை நெய்வேதியம் ஆக வைத்து வழிபாடு செய்து வந்தால் நம்முடைய கோரிக்கைகள் விரைவிலேயே நிறைவேறும். அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

இறைவழிபாடு
அனுதினமும் நாம் இறைவனை வழிபாடு செய்து வருகிறோம். நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய விளக்கை ஏற்றி வைத்து நம்முடைய குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்வோம். அப்படி வழிபாடு செய்யும் போது கண்டிப்பான முறையில் ஊதுவத்தி ஏற்ற வேண்டும். தூபம் போட வேண்டும். ஏதாவது ஒரு நெய்வேத்தியத்தையும் வைத்து வழிபாடு செய்ய வேண்டும் இப்படி செய்தால் அந்த வழிபாட்டிற்குரிய பலன் நமக்கு கிடைக்கும். இறைவனின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியம்
அந்த வகையில் நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கோரிக்கைகள் நிறைவேற விநாயக பெருமானுக்கு நெய்வேதியமாக பேரிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை பங்குனி மாதத்தில் வரக்கூடிய சங்கடஹர சதுர்த்தி நாளன்று செய்யலாம். மேலும் விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளான புதன்கிழமையும் செய்யலாம். 89 என்ற எண்ணிக்கையில் பேரிச்சம் பழத்தை வைத்து வழிபாடு செய்ய வேண்டும். விநாயகருடைய கோவிலுக்கு சென்று காலை மாலை இந்த வழிபாட்டை செய்யலாம். உங்களுடைய வசதிக்கேற்ப எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம்.
தேங்காய் தீபம்
விநாயகர் ஆலயத்திற்கு சென்று தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி விநாயகப் பெருமானுக்கு நெய்வேதியமாக பேரிச்சம்பழத்தை வைத்து வழிபாடு செய்து வரலாம். வழிபாடு செய்து முடித்த பிறகு அதில் இருந்து 9 பேரிச்சம் பழங்களை எடுத்து அங்கேயே வைத்துவிட்டு மீதி உள்ள பேரிச்சம் பழங்களை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த பேரிச்சம் பழங்களை ஏதாவது ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து தினமும் அதனை சாப்பிட வேண்டும். சாப்பிடும் முன்பாக உங்களுடைய கோரிக்கைகளை மனதார கூறி சாப்பிட வேண்டும். 80 பேரிச்சம் பழங்களும் தீர்வதற்கு முன்பாக உங்களுடைய கோரிக்கை நிச்சயமாக நிறைவேறும்.
இதனையும் படியுங்கள் : உடல் நலம் பெற வராகி அம்மன் வழிபாடு



