அனைவருக்குமே அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தினமும் ஒரு காரியம் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அதற்கான முயற்சிகளையும் ஒரு சிலர் எடுப்பார்கள். அந்த காரியத்தில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டு நடைபெறாமல் போயிருக்கும் அந்த காரியத்தை வெற்றிகரமாக செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளம் அதிகரிக்கும். அந்த காரியத்தை எந்தவித தடைகளும் இல்லாமல் செய்வதற்கு உதவக்கூடிய ஒரு சிறந்த எளிமையான பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

தெய்வத்தின் அருள்
எந்த ஒரு செயலை நாம் தொடங்குவதற்கு முன்பாகவும் தெய்வத்தின் அருளை பெற்று பிறகு தொடங்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த காரியம் நன்றாக நடக்கும் என்று நம் முன்னோர்கள் காலம் முதல் பின்பற்றி வரக்கூடிய ஒரு விஷயம். அந்த தெய்வத்தை வழிபாடு செய்வதோடு சேர்த்து இந்த எளிமையான பரிகாரத்தையும் செய்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயமாக நடந்திரும். மேலும் செல்வ தடைகள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் அதிகரிக்கும்.
பரிகாரம் செய்ய வேண்டிய முறை
இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு ஒரு பிரியாணி இலை தேவைப்படும். எந்த நாள் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு கிண்ணம் எடுத்து அதில் குங்குமத்தை போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து ஒரு குச்சியை பயன்படுத்தி நீங்கள் எந்த காரியம் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த காரியத்தை பிரியாணி இலையில் குங்குமத்தை தொட்டு எழுத வேண்டும். பிறகு அந்த பிரியாணி இலையை இஷ்ட தெய்வத்தின் முன்பாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். தொடர்ச்சியாக 7 நாட்கள் இதனை செய்து முடித்துவிட்டு ஒரு அகல் விளக்கில் பச்சைக் கற்பூரத்தை வைத்து எரித்து அந்த பிரியாணியிலையை அப்படியே எரிக்க வேண்டும். அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து துளசி செடி அல்லது வன்னி மரம் இருந்தால் அதற்கு ஊற்ற வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்து வந்தால் நாம் நினைத்த காரியம் நிச்சயமாக தடைகள் இல்லாமல் நடந்து முடியும். நினைத்த காரியத்தில் இருக்கக்கூடிய தடைகள் விலகுவதற்கும் செல்வ வளம் அதிகரிக்கவும் இந்த எளிமையான பரிகாரத்தை செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : ஒற்றுமையை அதிகரிக்கும் உப்பு மிளகு பரிகாரம்


