- Prep
- 5 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Dessert
திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டத்தில் இத்த பதார்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தின் இறுதி நாளில் இந்த ஆடி கும்மாயம் செய்து முன்னோர்களுக்கு படைத்து அனைவரும் உண்பார்கள். இதில் பருப்பு வகைகளும் கருப்பட்டியும் சேர்த்திருப்பதால் உடலுக்கு நல்ல சத்தை கொடுக்கிறது. அது மட்டுமல்லாமல் ரத்த சோகையையும் குறைக்கிறது. காரணம் இதில் இருக்கும் பருப்பு வகைகள் மற்றும் கருப்பட்டியில் இரும்பு சத்து அதிகம் இருப்பதுதான். இந்த ஆடி மாத கும்மாயத்தை ஆடி மாதத்தில் மட்டும் செய்ய வேண்டுமா என்றால் அப்படி என்று ஒரு வரைமுறையும் இல்லை.
இது புதிதாக பூப்படைந்த பெண்களுக்கும் செய்து கொடுக்கலாம். அப்படி கொடுக்கும் பொழுது பெண்களுக்கும் உடல் நல்ல வலுப்பெறும். இரத்த விருத்தியாகும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளுக்கெல்லாம் இவை ஒரு நல்ல மருந்தாக இருக்கும். பலத்தை தரக்கூடிய அனைத்து சத்துகளும் இந்த ஆடி கும்மாயத்தில் இருப்பதால் இதை பூப்பெய்திய பெண்களுக்கு மட்டும் அல்லாமல் குழந்தைகள் ஆண்கள் என அனைவரும் உண்ணலாம். பெண்களுக்கும் நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கக்கூடிய ஒரு இனிப்பு வகையாக இருக்கிறது. இந்த கும்மாயம் செய்வதற்கு பருப்பு வகைகளை வறுத்து எடுத்து அரைத்து வைத்து கொள்ள வேண்டும். இப்படி உங்களால் செய்யும் பொழுது அரத்துக்கொள்ள முடியவில்லை என்றால் நன்றாக வறுத்து பொடித்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடைத்து வைத்திருந்து எப்போது தேவையோ அப்போது அந்த மாவை உபயோகப்படுத்தி செய்து கொள்ளலாம்.
ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும் இந்த கும்மாயத்தை செய்து பெண்களுக்கு கொடுக்கும்பொழுது அவர்களுக்கு இரும்பு சத்து அதிகமாக கிடைப்பது மட்டுமல்லாமல் இரத்தசோகை பிரச்சினை எலும்பு பிரச்சனை கர்ப்பபை பிரச்சனைகள் என அனைத்தும் சரியாகிறது. ஆடி மாதத்தில் பூஜைக்கு என்று மட்டுமல்லாமல் முடிந்த அளவிற்கு வாரத்தில் ஒரு நாளாவது செய்து அனைவரும் உண்டு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். இந்த ஆடி மாத கும்மாயம் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
Ingredients
Method
முதலில் அடுப்பில் ஒரு இரும்பு வானெலியை வைத்து சூடாகியதும் எடுத்து வைத்துள்ள அரிசி மற்றும் பயிறுளை தனி தனியாக இட்டு நன்றாக பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்து ஆற வைக்கவும்.
நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.அரிசி மற்றும் பயிறு வகைகள் ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்துரவை பத்திற்கு அரைத்த எடுத்து கொள்ள வேண்டும்.
பின் குக்கரில் 12 கப் அளவிற்குஅரைத்து வைத்துள்ள மாவை எடுத்து கொள்ள வேண்டும்.12 கப்மாவிற்கு 2 கப்தண்ணீர் சேர்த்து குக்கரில்3 விசில் விட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
கருப்பட்டியில் 14 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் எடுத்து வடிகட்டி தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.பிறகு வேக வைத்து எடுத்துள்ள மாவில் கருப்பட்டியை சேர்த்து நன்றாக கை விடாமல் கிளறவும்.
கொதித்து திக்காக வந்ததும் ஏலக்காய் பொடி, சுக்கு பொடி , நெய் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.விருப்பம் இருந்தால் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளலாம்.
நன்றாக அனைத்தும் கலந்து வந்த உடன் வறுத்து வைத்துள்ள முந்திரி பருப்பை சேர்த்து பரிமாறினால் சூடான சத்துமிக்க சுவையான ஆடி கும்மாயம் தயார்.






