நம்ம அரிசி மாவு வச்சு இடியாப்பம் புட்டு கொழுக்கட்டை அப்படின்னு நிறைய செஞ்சு இருப்போம் ஆனால் அரிசி மாவு வச்சு நிறைய பேரு அக்கி ரொட்டி செஞ்சிருக்கவே மாட்டாங்க. கர்நாடகா ஸ்பெஷலான இந்த அக்கி ரொட்டி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி. உங்க வீட்ல கோதுமை மாவு இல்ல அப்படின்னா அரிசி மாவு இருந்தா கண்டிப்பா இந்த அக்கி ரொட்டியை ஒரு தடவை செஞ்சு பாருங்க. சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும் உங்க குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸுக்கும் இந்த அக்கி ரொட்டியா செஞ்சு அதுக்கு காரசாரமா ஒரு சைட் டிஷ் வச்சு கொடுத்து விடலாம். நம்ம சரியான முறையில் செஞ்சா இந்த அக்கி ரொட்டி ரொம்ப சாஃப்டா லேயர் லேயரா கிடைக்கும்.
கடைகள்ல கிடைக்கிற மாதிரி ஒரு சூப்பரான அக்கி ரொட்டிய வீட்டிலேயே செய்யலாம். வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தா அவங்களுக்கும் செஞ்சு கொடுக்கலாம் நீங்க எங்கேயாவது பக்கத்துலயே டூர் போறீங்களா அப்போ காலையில பிரேக்ஃபாஸ்ட்க்கு இட்லி தோசைன்னு ஒரே மாதிரி செய்யாம இந்த அக்கி ரொட்டியை செஞ்சு எடுத்துட்டு போகலாம் ரொம்ப நேரத்துக்கு நல்ல சாஃப்டா இருக்கும் இப்ப வாங்க குக் வித் கோமாளி புகழ் ஷெரினோட இந்த கர்நாடகா ஸ்பெஷல் அக்கி ரொட்டியை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
அக்கி ரொட்டி | Akki Rotti Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் அரிசி மாவு
- 1 கப் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும்.
- அதில் எடுத்து வைத்துள்ள அரிசிமாவை சேர்த்து நன்றாக கலந்து தண்ணீர் வற்றியவுடன் அதனை ஒரு ஓரமாக பத்து நிமிடத்திற்கு வைத்து விடுவோம்.
- பத்து நிமிடத்திற்கு பிறகு சிறிதளவு எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக ஒரு சேர பிசைந்து எடுக்கவும்.
- பிறகு கையில் எண்ணையை தடவிக் கொண்டு சப்பாத்திக்கு தேய்ப்பது போல் வட்ட வடிவில் தேய்த்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்பொழுது ஒரு கடாயில் சேர்த்து இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான அக்கிரொட்டி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ராகி ரொட்டி இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!