ஒன்னும்மில்லாத உங்களிடம் பணம் சேர்ந்து கொண்டே வேண்டுமா ? இந்த ஒரு மர குச்சி போதும்!

- Advertisement -

இந்த உலகத்தில் வாழும் சில மனிதர்களுக்கு திறமை என்பதை சுத்தமாக இருக்காது இருந்தாலும் அவர்களுக்கு இருக்கும் அதிர்ஷ்டமானது வாழ்க்கையில் அவர்கள் முன்னேறுவதற்காக ஒரு வழியை கொடுக்கும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லாவிடிலும் அவர்களது சொந்த திறமையால் எப்படியாவது கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர்க்கு திறமை இருந்தாலும் கூட அவர்களால் வாழ்வில் முன்னேறவே முடியாது கை தூக்கி விடுவதற்கு அதிர்ஷ்டமும் இருக்காது ஆனால் தனக்கு என்ன ஒரு சாம்ராஜ்யத்தை படைத்து தன்னால் முடிந்த அளவிற்கு ஒரு பத்து பேருக்கு நாளும் வேலை கொடுத்து அவர்களையும் வாழ வைக்க வேண்டும் என விரும்புவார்கள்.

-விளம்பரம்-

ஆலமர விழுது பரிகாரம்

இப்படி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றும், திறமை இருந்தும் முடியாமல் துடிப்போடு இருப்பவர்களும், உங்களால் ஒரு பத்து பேர் நலமுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவர்கள் உங்களிடம் பணம் மற்றும் செல்வ வளங்கள் வந்து சேர வேண்டும் என்றால் இந்த ஆலமர விழுது பரிகாரத்தை செய்து பாருங்கள். இந்த ஆலமர விழுது பரிகாரத்தை நாம் செய்வதற்கு முதலில் ஒரு சிறிய ஆலமர விழுதை துண்டை வெட்டி எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் அப்படி வெட்டு எடுத்து கொண்ட ஆலமர விழுது மூன்று இன்ஞ் அளவு இருந்தால் கூட போதும். இதனுடன் நமக்கு பச்சரிசி மற்றும் மஞ்சள் நிற நூல் தேவைப்படும் இவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பரிகாரம்

நாம் பரிகாரத்திற்கு எடுத்து வைத்திருக்கும் பச்சரிசி சுத்தமானதாக இருக்க வேண்டும் அதில் கல், மண், தூசு என எதுவும் இருக்க கூடாது. அப்படி நாம் வைத்திருக்கும் பச்சரிசியை சில்வர், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி இப்படி எதனால் செய்யப்பட்ட ஒரு டப்பாவை எடுத்துக்கொண்டு அதில் நிரப்பி விடுங்கள். பின்பு நாம் எடுத்துக் கொண்ட ஆலமர விழுதில் நாம் வைத்திருக்கும் மஞ்சள் நிற நூலை சுற்றி ஆலமர விழுதை பச்சரிசிக்குள் முழுவதுமாக புதைத்து வைத்து விடுங்கள். இப்படி பச்சரிசிக்குள் புதைத்து வைத்திருக்கும் ஆலமர விழுது எந்த வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டில் பணம் மற்றும் செல்வ வளங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் நீங்கள் வேண்டாம் என்று சொன்னாலும் பணம் மற்றும் செல்வம் வீடு தேடி வரும்.

தொழில் மற்றும் வியாபாரம்

அதேபோல் நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும் வியாபாரம் செய்பவராக இருந்தாலும் உங்கள் தொழிலில் நல்ல லாபம் வரவில்லை நஷ்டத்தில் போகிறது என்று நினைப்பவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில் செய்து கொள்ளலாம். ஏன் தள்ளுவண்டி கடை, பூக்கடை, பெட்டிக்கடை இது போன்ற சின்ன சின்ன தொழில் செய்பவர்கள் கூட இந்த பரிகாரத்தை கடையில் வைத்தே செய்யலாம். இல்லை நீங்கள் வைத்திருக்கும் கல்லாப்பெட்டியில் இந்த ஆலமர விழுதில், மஞ்சள் நிற நூலை சுற்றி வைக்கலாம் இதன் மூலம் உங்களின் பண வரவு அதிகரித்து உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லை கூட குறைந்து விடும் அதனால் பணவரவு இல்லாதவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்கிறீர்கள்.

எப்போது செய்ய வேண்டும்

நம் ஒரு சில பரிகாரத்தை செய்யும் போது அதற்கான நாள் மற்றும் நேரங்கள் என பார்க்க வேண்டி இருக்கும். ஆனால் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதற்கு பொருத்தவரை நாள் கிழமை நல்ல நேரம் என எதுவும் பார்க்கத் தேவையில்லை காலையில் 5 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம. நீங்கள் இந்த பரிகாரம் செய்துவிட்டு அடிக்கடி பொருட்களை மாற்ற வேண்டுமா என்று கேட்டால் ஆறு மாதத்தை ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம் பச்சரிசியில் வண்டுகள் பிடிக்காமல் இருந்தால் ஒரு வருடம் வரை அதை வைத்துவிட்டு. அதன் பின்பு குருவிகள் பறவைகளுக்கு சாப்பிட வைத்துவிட்டு வேறு மாற்றிக் கொள்ளலாம்.

-விளம்பரம்-

மகாலெட்சுமி கடாட்சம்

இந்த பரிகாரத்தை நாம் செய்யும் போது இந்த பரிகாரம் செய்யும் இடத்திற்கு ஒரு மகாலட்சுமி கடாட்சம் கிடைக்கும். மகாலட்சுமி குடியிருக்கும் இடத்தில் அனைத்து செல்வ வளங்களும் தானாகவே வந்து சேரும் நாம் வைத்திருக்கும் ஆலமர விழுதும் மஞ்சள் நிற நூலும் ஒன்றாக சேரும்போது கிடைக்காத பல நன்மைகள் கூட உங்களுக்கு தேடி வந்து கிடைக்கும். நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் முழு நம்பிக்கையோடு, ஆத்மார்த்தமாக செய்யும் போது அதனுடைய முழு பலனும் நமக்கு கிடைக்கும் என்று சொல்வார்கள். அதனால் நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here