இந்த உலகத்தில் வேலை பார்த்து சம்பாதித்தால் தான் நம்முடைய அன்றாட தேவைகள் நிறைவேறும். நம்முடைய கஷ்டங்கள் தீரவும் தினமும் பஞ்சமில்லாமல் என்பதற்கும் நிச்சயமாக ஏதாவது ஒரு வேலை பார்க்க வேண்டும். அனைவரும் ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டுதான் இருப்போம் ஆனால் அந்த வேலை நமக்கு பிடித்தமானதாக இருக்கிறதா என்று கேட்டால் ஒரு சில பேருக்கு தான் பிடித்த வேலை கிடைக்கும் மீதி இருப்பவர்கள் கிடைக்கின்ற வேலையைத்தான் விரும்பி பார்க்க வேண்டும். ஒரு பக்கம் என்னதான் வேலை இருந்தாலும் விரும்பிய வேலையை கிடைப்பதற்கு அதனை தேடி அலைந்து கொண்டே இருப்பார்கள். நல்ல வேலை விரும்பிய வேலை கிடைப்பதற்கு முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் விரும்பிய வேலை கிடைப்பதற்கு காளியம்மனை வழிபடுவது சிறந்தது. காளியம்மனை எந்த முறையில் வழிபட்டால் விரும்பிய வேலை கிடைக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
காளியம்மன்

காளியம்மன் உக்கிர தெய்வங்களில் ஒருவராக இருப்பவள். தீய விஷயங்கள் செய்யும்போது மட்டும்தான் காளியம்மன் உக்கிர தெய்வமாக இருப்பாள் மற்ற நேரங்களில் காளியம்மன் அன்பாக சாந்த சொரூபினியாகவும் இருப்பார். அவரிடம் நமக்கு தேவையான விஷயங்களை கேட்டு வாங்கிக் கொள்ளலாம் முழு மனதோடு அவர்களிடம் நாம் கோரிக்கைகளை வேண்டுதல்களை வைக்கும் போது நிச்சயமாக நமக்கு இருக்கக்கூடிய தடைகளை நீக்கி நமக்கு நல்லதையே காளியம்மன் செய்வார்.
விரும்பிய வேலை கிடைக்க செய்ய வேண்டிய வழிபாடு
இந்த வழிபாட்டை காளியம்மன் கோவிலில் சென்று தான் செய்ய வேண்டும் இதற்கு நாம் கருப்பு அரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். வெள்ளை நிற துணியில் ஒரு கைப்பிடி கருப்பு அரிசியை வைத்து முடிச்சாக கட்டி அந்த முடிச்சை கோவிலுக்கு சென்று ஏதாவது ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.
காளியம்மன் பூஜை
பிறகு காளியம்மனுக்கு பூக்கள் மாலைகள் வாங்கி தந்து அலங்கரிக்க சொல்ல வேண்டும். தேங்காய் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு கொடுத்து அர்ச்சனை செய்யலாம் மேலும் காளியம்மனுக்கு உகந்த குங்குமத்தை வாங்கித் தந்து காளியம்மன் உடைய க்ஷ முழு அருளையும் பெறலாம். இந்த தாந்திரீக வழிபாட்டை முழு மனதோடு செய்துவிட்டு விரும்பிய வேலைக்காக முயற்சியில் ஈடுபட்டீர்கள் ஆனால் நிச்சயமாக காளியினுடைய அருளால் உங்களுக்கு விரும்பிய வேலை நல்ல வேலை சீக்கிரத்திலேயே கிடைக்கும். விரும்பிய வேலையில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும்.
இதனையும் படியுங்கள் : இந்த அம்மனை மட்டும் வணங்கினால் போதும்! கஷ்டமே நெருங்காது!




