ஆண்கள் இதை மட்டும் தினசரி செய்தால் போதும்! குடும்பம் சுபிக்ஷமாக இருக்கும்!

- Advertisement -

பொதுவாக வீட்டில் உள்ள பூஜை அறையை பொருத்தவரை பூஜை, சம்பிரதாயங்கள் என அனைத்து வழிமுறைகளையும் பெண்கள் தான் கடைபிடித்து வர வேண்டும் அது தான் அவர்கள் பொறுப்புகள் மற்றும் கடமையும் கூட. ஆனால் அதே போல் வீட்டில் சில விஷயங்களை ஆண்கள் செய்யும் போது அதன் பலன் கூடுதலாக இருக்கும் அப்படி நாம் இன்று பார்க்க போகிற விஷயத்தை வீட்டில் உள்ள ஆண்கள் செய்து வந்தால், ஏன் தொடர்ந்து இந்த விஷயத்தை செய்து வந்தால் நம் குடும்பம் லட்சுமி கடாட்சத்துடன் சீரும் சிறப்புமாக இருக்கும். வீட்டில் உள்ள மூளை முடுக்கெல்லாம் சந்தோஷங்களும், கொண்டாட்டங்களும் நிறைந்து காணப்படும். அது என்ன விஷயம் என்பதனை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நான் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

முன்னோர் வழிபாடு

அது நம் முன்னோர்களை வேண்டி காகத்திற்கு படையல் வைப்பது தான் இந்த வேலையை பொதுவாக வீட்டில் இருக்கும் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரி, யார் வேண்டுமானாலும் செய்யலாம் ஏன் குழந்தைகள் கூட இதை செய்யலாம். ஆனால் ஒரு வீட்டில் உள்ள ஆண் காலையில் குளித்து முடித்து விட்டு காகத்திற்கு படையல் வைத்து வர வேண்டும் இங்கே நீங்கள் வைக்கும் படையல் நீங்கள் வீட்டில் அன்றாட சமைக்கும் உணவாக இருக்கலாம் அல்லது மிக்சர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்களாக கூட இருக்கலாம். இப்படி படையில் வைத்துவிட்டு அருகிலே ஒரு கிண்ணத்தில் தண்ணீரையும் வைத்துவிட்டு ஒரு நிமிடம் உங்கள் முன்னோர்களை மனதில் நினைத்து மனதார உங்கள் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பலன் இரண்டிப்பாக

இந்த ஒரு வழிமுறையை வீட்டில் உள்ள ஆண்கள் தொடர்ந்து பின்பற்றி வந்து கொண்டே இருந்தாலே போதும் அந்த குடும்பத்தில் இருக்கும் எவ்வளவு பெரிய கஷ்டங்களாக இருக்கட்டும் படிப்படியாக குறைந்து கொண்டே வரும். ஏன் உங்கள் முன்னோர்களால் உங்கள் வீட்டிற்கு சாபம் இருந்தாலும், கண்ணுக்கே தெரியாத தோஷங்கள் இருந்தாலும் சரி ஆண்கள் இந்த விஷயங்களை தொடர்ந்து செய்து வரும் போது அந்த துன்பங்கள், கஷ்டங்கள் நீங்கி உங்களுக்கு நல்ல பலன் கொடுக்கும். இதை வீட்டில் உள்ள பெண்கள் செய்வதை விட ஆண்கள் செய்யும்போது அந்த பலன் இரண்டிப்பாக கிடைக்கும்.

விளக்கு ஏற்றுதல்

அதேபோல் எப்படி இந்த விஷயங்களை ஆண்கள் செய்ய வேண்டும் என கூறுகிறோமோ. அதேபோல் வீட்டில் உள்ள பெண்களுக்கும் சில வழிமுறைகள் உள்ளது ஒரு வீட்டில் விளக்கு ஏற்றும் போதும் அல்லது அதை குளிர வைக்கும் போது அதை வீட்டில் உள்ள பெண்கள் தான் செய்ய வேண்டும் விளக்கு ஏற்றிவிட்டு அதை ஆண்களை குளிர வைக்க சொல்வது, ஆண்களை விளக்கு ஏற்ற சொல்வது இது போன்ற விஷயங்களை செய்யாதீர்கள். தினமும் வீட்டில் கடவுளை பூஜை செய்து பெண்கள் விளக்கேற்றி மனதார வழிபட்டு வந்தால் தான் நம் குடும்பம் சுபிட்சமாக இருக்கும் லட்சுமி கடாட்சமாகவும் இருக்கும்.

கடமையை செய்யாவிடில் பிரச்சனை

அப்போது ஆண்கள் விளக்கேற்ற கூடாதா என்று பலருக்கு கேள்வி எழும் ஆண்கள் விளக்கு ஏற்றலாம் அது எப்பொழுது தெரியுமா ? வீட்டில் பெண்கள் இல்லாத நேரத்தில் அல்லது சூழ்நிலையின் காரணமாக பெண்களால் விளக்கேற்ற முடியாத பட்சத்தில் ஆண்கள் விளக்கு ஏற்றலாம். ஆனால் பெண்கள் விளக்கு ஏற்றுவதற்கு சோம்பேறித்தனம் பட்டு அல்லது வேண்டுமென்றே ஆண்களை இப்படி விளக்கேற்ற சொல்லும் பொழுது அந்த விளக்கேற்ற வேண்டிய பெண்கள் இப்படி கடமையிலிருந்து தவறும் பொழுது அதுதான் நம் வீட்டிற்கு மிகப் பிரச்சினையாக வந்து விடும் ஆகையால் இனி இந்து தவறை செய்யாதீர்கள்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here