- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- andhra, Indian
- Course
- LUNCH
‘மீன் குழம்பு’ என்ற பெயரை சொன்னாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊரும். அதுவும் சிலர் வீட்டில் வைத்த மீன் குழம்பை இரண்டு நாட்களுக்கு வைத்து சாப்பிடுவார்கள். பொதுவாக மீன் குழம்பு தயாரித்த நாளை விட அடுத்த நாள் தான் அதன் சுவை அருமையாக இருக்கும். கோழிக்கறி, ஆட்டுக்கறி, முட்டை இதுபோன்ற உணவுகளை விட மீனில் இருக்கும் சக்தி தான் உடலுக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்கிறது. இவ்வாறான ஊட்டச்சத்து நிறைந்த மீனை வைத்து செய்யக்கூடிய மீன் குழம்பை ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சுவையில் செய்கின்றனர்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்த மாதிரி மீன் குழம்பின் சுவையும், அதன் செய்முறையும் மாறுபடும். எனவே நாம் விதவிதமான சுவைகளில் மீன் குழம்பு செய்து சாப்பிடலாம். இன்று இங்கே நாம் பார்க்கப்போவது ஆந்திராவில் செய்யப்படும் மீன் குழம்பு தான். பொதுவாக கடல் உணவு அனைத்து வயதினருக்கும் உகந்த உணவு. பொதுவாக அனைத்து கடல் உணவுகளிலும் கால்சியம், வைட்டமின்-டி, புரதம், தாது உப்புக்கள், ஒமேகா-3, கொழுப்பு அமிலம், எண்ணெய், துத்தநாகம் போன்றவை உள்ளன.
இப்படியான டேஸ்டி மீன் குழம்புகளில் சுவை தரும் மீன்களை சேர்த்தால் அதன் சுவையே தனி தான். மீன் குழம்புகளில் ஒரு குறிப்பிட்ட மீன்களை சேர்ப்பதால் அவற்றுக்கு அந்த மீனின் பெயர்களே சூட்டப்படுகிறது. இதனை செய்யும் பொழுதே வீடு முழவதும் மணமணக்கும். இதனை சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட்டால் அருமையாக இருக்கும். இன்று ஆந்திரா ஸ்டைல் மீன் குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்தமுறை மட்டன் வாங்கினால் ஆந்திரா மட்டன் கிரேவி இப்படி செய்யுங்க!
Ingredients
Method
முதலில் மீனில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் தனியா, வெந்தயம், வர மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயத்தை விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு மண் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
அதன்பிறகு இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளி சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை வதக்கவும்.
பின் காஷ்மீர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி புளிக்கரைசல், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
பின் புளிக்கரைசல் நன்கு கொதித்தவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து வேக விடவும். மீன் வெந்தவுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் காரசாரமான ஆந்திரா ஸ்டைலில் மீன் குழம்பு தயார். சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.






