தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு பல வெரைட்டிஸ்ல சட்னி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னி கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. எப்பவுமே நம்ம வீட்ல ஒரே மாதிரியா செய்ற இட்லி தோசைக்கு கொஞ்சம் வித்தியாசமா டெய்லியும் சட்னி செஞ்சா சாப்பிடுறதுக்கும் நமக்கு போர் அடிக்காம இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னி பாக்க போறோம்.
என்னதான் நிறைய காய்கறிகள் இருந்தாலும் கோவக்காயில் நிறைய உடம்புக்கு தேவையான சத்துக்கள் இருக்கு ஆனா ஒரு சிலருக்கு கோவக்காய் வறுவல் கோவக்காய் கிரேவின்னு எது செஞ்சாலும் சுத்தமா பிடிக்காது அப்படி கோவக்காய் பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி ஒரு சட்னி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இதுல தக்காளி கொத்தமல்லி இலைகள் சீரகம், பூண்டு எல்லாமே சேர்க்கறதால நல்லா வாசனையா சாப்பிடுறதுக்கே அவ்ளோ சூப்பரா இருக்கும்.
இட்லி தோசை சப்பாத்தி எல்லாத்துக்கும் சைடு டிஷ்ஷா சாப்பிடலாம். சுட சுட சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப சூப்பராவே இருக்கும். இந்த டேஸ்டான சுவையான கோவக்காய் சட்னிக்கு கண்டிப்பா நிறைய பேரு நாலு அஞ்சு இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு ருசியா இருக்கும் இந்த சட்னி செய்யறப்போ நம்ம கோவக்காய் நல்லா வதக்கி எடுக்கணும். அப்பதான் நமக்கு சட்னி சூப்பரா கிடைக்கும்.
சரியா வதக்காமல் விட்டுட்டோம் அப்படின்னா கண்டிப்பா சட்னி நல்லாவே இருக்காது. அதனால கண்டிப்பா சட்னி செய்யும்போது கோவக்காய் நல்ல வதக்கி பொன்னிறமான பிறகுதான் சட்னி செய்யணும். இந்த வித்தியாசமான கோவக்காய் சட்னி ரெசிபி கண்டிப்பா உங்க வீட்ல ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க கோவக்காய் பிடிக்காதவர்கள் கூட கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த சுவையான கோவக்காய் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஆந்திரா கோவக்காய் சட்னி | Andhra Kovakkai Chutney Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கி கோவைக்காய்
- 2 தக்காளி
- 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- 1 டீஸ்பூன் சீரகம்
- கொத்தமல்லி சிறிதளவு
- 1 டீஸ்பூன் மிளகு
- 10 பல் பூண்டு
- 4 காய்ந்த மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
செய்முறை
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய கோவக்காய் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு கொத்தமல்லி இலைகள் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.
- அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் பூண்டு, சீரகம், மிளகு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பிறகு அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோவக்காய் சட்னி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கோவைக்காய் வைச்சி இப்படி கூட சாதம் செய்யலாமா ? அடுத்தமுறை கோவைக்காய் வாங்கினால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!