வசதியானவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று அனைத்து பெற்றோர்களுமே ஆசைப்படுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வத்தோடு படிப்பார்கள் ஆனால் இன்னும் ஒரு சில குழந்தைகளால் படிப்பில் ஆர்வம் காட்ட முடியாது. அப்படி கஷ்டப்படக்கூடிய குழந்தைகள் அவர்களே விருப்பப்பட்ட படிப்பில் ஆர்வம் கொண்ட நன்றாக படிப்பதற்கு ஆஞ்சநேயருக்கு இந்த ஒரு வழிபாட்டை செய்து பாருங்கள்.
படிப்பில் ஆர்வம் பெருக வழிபட வேண்டிய தெய்வங்கள்

பொதுவாக குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக சரஸ்வதி தேவியையும் ஹயக்ரீவரையும் வழிபாடு செய்வோம். இருவரையும் வழிபாடு செய்வதால் ஞானம் கிடைக்கும். மேலும் விநாயகர் பெருமானையும் ஆஞ்சநேயரையும் வழிபாடு செய்வதன் மூலமும் குழந்தைகளுக்கு புத்தி கூர்மை அதிகரித்து படிப்பில் சிறந்து விளங்குவார்கள். விநாயகப் பெருமானை நினைத்து நாம் வழிபட ஆரம்பித்து விட்டால் கல்வி பெருகும். அதேபோலத்தான் ஆஞ்சநேயருக்கு ஒரு சில வழிமுறைகள் உள்ளது அதனை பின்பற்றி வழிபட்டு வந்தால் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.
ஆஞ்சநேயர் வழிபாடு
உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று இரண்டு அகல் விளக்கு வாங்கி நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும் பிறகு அந்த தீபத்தில் மஞ்சள் தூளை போட வேண்டும். ஆஞ்சநேயருக்கு துளசி மாலை வாங்கி கொடுத்து படிக்கின்ற பிள்ளைகளின் பெயரில் அர்ச்சனை செய்து வழிபாடும் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நிச்சயமாக உங்கள் குழந்தைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உங்களுடைய குழந்தைகளையும் அழைத்துச் சென்று வழிபாடு செய்யலாம். குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்தவர்களாக இருந்தால் அவர்களுடைய கைகளால் தீபம் ஏற்றுவது சிறந்தது. இல்லையென்றால் பெற்றோர்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.
வழிபாடு செய்ய வேண்டிய நாள்
இந்த வழிபாட்டை அமாவாசை தினத்தில் செய்வது சிறந்தது. ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை போல அமாவாசை திதியும் உகந்தது எனவே ஒவ்வொரு அமாவாசையிலும் இந்த வழிபாட்டை ஆஞ்சநேயருக்கு செய்வதன் மூலம் அவருடைய அருளை முழுவதுமாக பெறலாம். அமாவாசை திதியில் வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகள் வீட்டிலேயே கூட ஆஞ்சநேயரை வழிபாடு செய்யலாம். அமாவாசை திதி என்று எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். எளிமையான இந்த வழிபாட்டை செய்து ஆஞ்சநேயர் அருளைப் பெற்று குழந்தைகளை கல்வியில் சிறந்து விளங்க செய்யலாம்.
இதனையும் படியுங்கள் : கஷ்டங்களை நீக்கக்கூடிய பஞ்ச தீப வழிபாடு!!


