பணம் வீடு தேடி வரும் சமையலறையில் இந்த ஒரு பொருளை முறையாக பராமரியுங்கள்!

- Advertisement -

தற்போதைய நாட்களில் பணம் இல்லாமல் இந்த உலகில் நம்மால் எதுவும் செய்ய இயலாது அந்த அளவிற்கு பணம் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது. ஏன் ஒரு சிறு குழந்தைக்கு கூட பணத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்திருக்கும். அந்த பணம் நம் வீட்டில் குறைவில்லாமல் இருக்க வேண்டுமா அதற்காக நம் வீட்டின் சமையலறையில் நாம் ஒரு சில விஷயங்களை செய்யும் போது இது சாத்தியமாகும். நம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. ஆம், நம் வீட்டில் உள்ள பெண்கள் சமையல் அறை மற்றும் பூஜை அறையை முறையாக பராமரித்து பயன்படுத்தும் போது நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கும்.

-விளம்பரம்-

அஞ்சறைப்பெட்டி

நம் வீட்டிற்கு மகாலட்சுமி தேவியின் பரிபூரணமான அருள் கிடைக்க வேண்டும் என்றால். முதலில் நமக்கு குபேரனின் ஆசை தேவைப்படும், குபேரனின் ஆசி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால் குபேரனின் அம்சமாக விளங்கக்கூடிய சில பொருட்களை நாம் வீட்டில் முறையாக பராமரித்து பயன்படுத்தி வர வேண்டும். அப்படி குபேரரின் அம்சமாக கருதக்கூடிய பொருட்களில் நம் வீட்டில் இருக்கும் அஞ்சறை பெட்டியும் ஒன்று. இப்படி நம் வீட்டில் இருக்கும் இந்த அஞ்சறை பெட்டியை நாம் சரியாக பராமரித்து பயன்படுத்தி வந்தாலே போதும் மகாலட்சுமி தயாரின் பரிபூரண அருள் நமக்கு கிடைத்துவிடும்.

- Advertisement -

சுக்கிர ஹோரை

மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு நீங்களும் உங்கள் வீட்டின் சமையலறையில் அஞ்சறைப்பெட்டியை பயன்படுத்த வேண்டும் என்று விருப்பப்பட்டாலும் சரி அல்லது புதியதாக அஞ்சறைப்பெட்டி வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் சரி நீங்கள் வெள்ளிக்கிழமை இதை செய்வது சரியாக இருக்கும். அதிலும் நீங்கள் வெள்ளிக்கிழமை இதை செய்யும் நேரம் சுக்கிர ஹோரையில் இருந்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். ஏன்னென்றால் சுக்கிர ஹோரையில் நாம் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியில் தான் முடியும்.

மருதாணி, மாதுளை

அப்படி நீங்கள் புதிதாக அஞ்சறைப்பெட்டி வாங்கி உங்கள் வீட்டிற்கு பயன்படுத்த நினைத்தாலும் அல்லது உங்கள் வீட்டில் அஞ்சரைப்பெட்டி இருக்கிறது அதை எப்படி முறையாக பயன்படுத்துவது என்று கேட்டால் முதலில் நீங்கள் வைத்திருக்கும் அஞ்சறை பெட்டியை சுத்தம் செய்து அதன் அடிப்பகுதியில் மஞ்சள் நிற துணியை விரித்துக் கொள்ள வேண்டும். இந்த மஞ்சள் நிறம் என்பது குரு பகவானின் அம்சமாக கருதப்படுவது. இதனால் குருவும், சுக்கிரனும் சேர்ந்து நம் நினைத்து பார்க்க அளவிற்கு நமக்கு பல நன்மைகளை தருவார்கள். மேலும் நாம் வைத்திருக்கும் மஞ்சள் நிற துணியின் மேல் மருதாணி செடியின் ஒரு தண்டையோ அல்லது மாதுளை மரத்தின் ஒரு தண்டையோ ஒரு விரல் அளவிற்கு வெட்டி எடுத்து வந்து வையுங்கள்.

அஞ்சறை பெட்டியில் இருக்க வேண்டிய 5 பொருட்கள்

ஏன் இந்த மருதாணியும், மாதுளை மரத்தின் தண்டை பயன்படுத்துகிறோம் தெரியுமா ?இவை இரண்டும் மகாலட்சுமி தேவியின் அம்சமாக விளங்க கூடியவை. நீங்கள் சமையல் அறையில் பயன்படுத்தும் அஞ்சறைப்பெட்டியில் பொதுவாக 5 அல்லது 7 அறைகள் இருக்கும் இந்த அஞ்சறைப்பெட்டி முக்கியமாக இருக்க வேண்டிய ஐந்து பொருட்கள் என்னென்ன தெரியுமா ? வெந்தயம், சோம்பு, கிராம்பு, ஏலக்காய் மற்றும் கடைசியாக ஒரு அறையில் வெள்ளை மொச்சை மற்றும் தாமரை விதையும் கலந்து இருக்க வேண்டும். இப்படி உங்கள் வீட்டில் அஞ்சறைப் பெட்டியில் இந்த ஐந்து பொருட்கள் முக்கியமாக இருக்க வேண்டும்.

-விளம்பரம்-

தங்கம், வெள்ளி, பணம்

மேலும் நம் அஞ்சறைப்பெட்டியில் வைத்திருக்கும் வெள்ளை மொச்சை, தாமரை விதை, மருதாணி விதை மற்றும் ஏலக்காய் இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து உங்கள் சௌாகரியத்திற்கு ஏற்றவாறு ஒரே அறையிலும் வைக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் எந்த ஒரு அறையும் காலியாகவே இருக்க கூடாது. எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும். மேலும் இந்த பொருட்கள் தான் அஞ்சறை பெட்டியில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை இதனுடன் நீங்கள் தங்கம், வெள்ளி, நாணயம், பணம் இப்படி உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை இதில் வைக்கலாம்.

பணத்தை இதில் வைத்து செலவு செய்யுங்கள்

நீங்கள் உங்கள் சம்பள பணத்தை வங்கியில் போட்டு வைத்திருந்தாலும் வீட்டிற்கு என்று செலவு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்திருப்பீர்கள் அல்லவா அந்த தொகையை நீங்கள் உங்கள் வீட்டின் அஞ்சறை பெட்டியில் வைத்து செலவு செய்து வந்தீர்கள் என்றால் உங்களது வீட்டில் பண வரவு என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கும் இதை நீங்கள் சரியாக செய்யும் போது உங்கள் வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக குடியேறுவாள்.

பணம் இரண்டு மடங்காக வரும்

பொதுவாக தலைவாசல், குங்குமம், துளசி மாடம், அடுப்பு, அஞ்சறைப்பெட்டி, கணவரின் பாதம் இவை அனைத்தையுமே சுக்கிரன் வாசம் செய்யும் இடங்கள் இந்த பொருள்களை எல்லாம் வீட்டு பெண்கள் சுத்தமாக இருந்து தொடும் பொழுது சுக்கிர பகவானை ஈர்க்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். இப்படி சுக்கிர பகவான் ஈர்க்கப்படுவதால் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்கிவழியும் எந்த ஒரு வீட்டில் மகிழ்ச்சி கொட்டி கிடைக்கிறது. அந்த வீட்டில் லட்சுமி தேவி தானாகவே வந்து குடி ஏறுவாள். மேலும் அஞ்சறை பெட்டியில் வைத்து பணம் செலவு செய்யும் போது அந்த பணம் இரண்டு மடங்காக உங்களுக்கு திரும்ப வரும். இதனால் உங்கள் வீட்டில் பணத்திற்கு குறைவே இருக்காது நம்பிக்கையுடன் இதை செய்து பாருங்கள் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-