மாலை நேர ஸ்நாக்ஸாக ருசியான ஆப்பிள் பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!!
தமிழர்கள் காலை உணவுக்கு முக்கியத்தும் கொடுப்பது போல மாலை நேர டிபனும் அவர்களின் வாழ்வியலுடன் கலந்து விட்டது. ஒரு சில நகரங்களில் மாலை நேர டிபன் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதிகப்பட்சமாக வடை, சமோசா, பஜ்ஜி இதை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் காரைக்குடி, கோய
தமிழர்கள் காலை உணவுக்கு முக்கியத்தும் கொடுப்பது போல மாலை நேர டிபனும் அவர்களின் வாழ்வியலுடன் கலந்து விட்டது. ஒரு சில நகரங்களில் மாலை நேர டிபன் பழக்கம் இல்லாமல் இருக்கலாம். அதிகப்பட்சமாக வடை, சமோசா, பஜ்ஜி இதை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கும் பழக்கம் இருக்கலாம். ஆனால் காரைக்குடி, கோயம்புத்தூர், திருச்சி பக்கம் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் மாலை நேர டிபன் தயார் செய்யப்படும்.
இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு ஏற்ற ராகி ஆப்பம் ஒரு முறை இப்படி செய்து பாருங்க!
ஒரு 5 மணிபோல் சரியாக, டீ குடிப்பதற்கு முன்பு சுடசுட பணியாரம் மாலை நேர டிபனில் இடம்பெறும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்னாக்ஸ் சாப்பிடுவதை அதிகமாக விரும்புவார்கள். அதிலும் மாலை நேரத்தில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பும் போது குழந்தைகள் வந்த உடனே என்ன ஸ்னாக்ஸ் இருக்கிறது என்றுதான் முதலில் கேட்பார்கள். அந்த வகையில் நமக்கு ஆப்பிள் இருந்தால் போதும். அதை வைத்து ஐந்தே நிமிடத்தில் சுவையான பணியாரம் செய்து அசத்தலாம்.