மேஷம்

இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உங்களை சங்கடப் படுத்தி வந்த நெருக்கடி விலகும். உடல்நிலை சீராகும். வழக்கு சாதகமாகும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். செல்வாக்கு உயரும். தடைபட்டிருந்த வேலை நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தடைபட்டு வந்த மாற்றமும் உயர்வும் கிடைக்கும். பத்திரிக்கைத் துறையில் உள்ள நண்பர்கள் நல்ல வாய்ப்பினைப் பெறுவார்கள். சுயதொழில்கள் புதிய பாதையில் திரும்பும். பயணங்கள் ஆதாய அமைப்பில் இருக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல்நிலையை கவனித்துக் கொள்ளவும்.
ரிஷபம்

இந்த வாரம் வரவேண்டிய பணம் வரும். உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். பூர்வீக சொத்தில் ஏற்பட்ட பிரச்னையில் முடிவு உண்டாகும். அரசு வழி முயற்சியில் லாபம் ஏற்படும். வெளிநாட்டு முயற்சி சாதகமாகும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு முதலியவை கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். தடைபட்ட முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பொருளாதார வரவுக்கும் அமைப்பு உண்டு. நண்பர்களின் உதவி கிடைக்கும். சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகம் உண்டு.
மிதுனம்

இந்த வாரம் அரசுவழி முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழில் முன்னேற்றமடையும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். நோய்கள் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாடு செல்லவும், உங்கள் வேலைகளுக்கும் அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதி கிடைக்கும். இந்த வாரம் உங்கள் தைரியத்தால் சில காரியங்கள் நடந்து விடும். சில எதிர்பாராத வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். தந்தைவழி உறவுகள் நன்றாக இருக்கும். பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கடகம்

இந்த வாரம் உங்களுக்கிருந்த நெருக்கடி விலக ஆரம்பிக்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். திருமண வயதினருக்கு வரன் வரும். குழந்தைக்காக தவமிருந்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். தடைபட்ட வேலை நடக்கும். சகோதரர்கள் ஒத்துழைப்பால் உங்கள் வேலை நடக்கும். வியாபாரிகள் தங்கள் தொழிலை விரிவு செய்வீர். குடும்பத்திற்காகச் செய்யும் செலவுகளால் மகிழ்ச்சி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். பல நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு.
சிம்மம்

இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். ஒருசிலர் புதிய வாகனம், சொத்துக்கள் வாங்குவீர். உடல்நிலையில் ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டு சங்கடப்படுத்தும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டு. வருமானம் நன்றாக இருக்கும். எந்தக் காரியத்தைச் செய்தாலும் மிகுந்த
கவனத்தோடு செய்யுங்கள். அவசரப்பட்டு வண்டி வாகனங்களை ஓட்ட வேண்டாம். இந்த வாரம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும்.
கன்னி

இந்த வாரம் தடைப்பட்ட வேலை நடக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையும். சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். திருமண வயதினருக்கு நல்ல வரன் வரும். நிதி வசதிகள் பெருகும். தொழில், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு. சேமிப்புக்கும் சாத்தியம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மகிழ்ச்சியைத் தரும். தம்பதிகளுக்கு குழந்தைப் பேறு அமையும்.
துலாம்

இந்த வாரம் புதிய முயற்சிகளில் கவனம் தேவை. பிள்ளைகள் நடவடிக்கையில் கண்காணிப்பு அவசியம். உடல்நிலையும் மனநிலையும் சீராகும். எதிர்ப்பு விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர் விலகிச்செல்வர். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் இருந்தால் நீங்கி விடும் அல்லது உங்களுக்குச் சாதகமாக அமையும். வாடகை கட்டிடத்தில் இருப்பவர்கள் சொந்த கட்டிடத்திற்கு மாறும் அமைப்பும் உண்டு. நிம்மதி தேடி கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் வந்தாலும் நீங்கிவிடும்.
விருச்சிகம்

இந்த வாரம் சங்கடங்கள் விலகும். வியாபாரம் தொழிலில் இருந்த நெருக்கடிகள் நீங்கி லாபம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நினைத்த வேலைகள் நடந்தேறும். குடும்பம், தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். புத்தி சாதுரியத்தால் ஒவ்வொரு வேலையையும் திட்டமிட்டபடி நடத்தி முடிப்பீர். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். குடும்பச் சூழல் கருத்து வேற்றுமை இன்றி அனுகூலமாக இருக்கும். தொழில் முன்னேற்றம், கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கலைத்துறையினரின் முன்னேற்றம் சாதகமாக அமையும். எதிர்பாராத நல்ல செய்திகள் உங்கள் காதில் விழும்.
தனுசு

இந்த வாரம் ஒரு சிலர் புதிய தொழில் தொடங்குவீர். வேலையில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வாங்குவீர். தொழில் முன்னேற்றம் அடையும். இதுவரை இழுபறியாக இருந்த வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். சிறு வியாபாரிகள் நிலை உயரும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பதவிகளையும் பொறுப்புகளையும் எதிர்பார்க்கலாம். ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
மகரம்

இந்த வாரம் குடும்ப உறவுகளை அனுசரித்துச் செல்வது நல்லது. வரவு செலவில் கவனம் தேவை. பிறரிடம் பேசும்போது உங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். பிரச்னைகளே உண்டாகும். புதிய முதலீடு செய்யும் முன் பலமுறை யோசிக்கவும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வருமானம் போதிய அளவிற்கு இருக்கும். முயற்சிகளில் சாதகம் உண்டு. மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருக்கும் பெண்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.
கும்பம்

இந்த வாரம் வியாபாரத்திற்காக எடுக்கும் முயற்சி இழுபறியாகும். பூர்வீக சொத்து விவகாரங்களில் பிரச்னை வரலாம் என்பதால் நிதானம் அவசியம். கவனமாக செயல்பட வேண்டுவதால் நன்மை உண்டாகும். தேவையற்ற பயம் போகும். செய்துவரும் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். வரவுகள் இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும். கடன்களில் ஒரு பகுதி அடையும். புதிய முதலீடுகளை இப்பொழுது தவிர்க்கவும். சக ஊழியர்களுடன் எச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு சிரமமான வாரம் என்பதால் பொறுமையோடு இருக்கவும்.
மீனம்

இந்த வாரம் நன்றாக பழகியவர்களும் விலகிச் செல்வர். உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்படும். குருவின் பார்வைகளால் உங்கள் எண்ணங்கள் ஈடேறும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். புதிய ஒப்பந்தங்களை முடிந்தவரை தவிர்க்கவும். புதிய நட்புகளால் சிலருக்கு பிரச்னை தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் பலன் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு சில நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டும். சகோதர உறவுகள் சற்று சிக்கலாகவே இருக்கும்.
இதனையும் படியுங்கள் : 2025 செவ்வாய் பெயர்ச்சியால் பல பிரச்சினைகளை சந்திக்க போகும் ராசிகள்!!


