மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த வாரம் முனைப்புடன் செயல்பட்டு காரியவெற்றி பெறும் வாரம். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் சுப காரிய பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்து மங்கள ஓசை கேட்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். உறவுகளிடையே இருந்த கசப்புணர்வு நீங்கி ஒற்றுமை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான சாதகமான பலன்கள் கிடைக்கும். வீடு, மனை வாங்கு வதில் உள்ள சிக்கல்கள் தீர்ந்து நீங்கள் எதிர்பார்த்த மாதிரியான மனை வீடு கிடைக்கும். தந்தை மகன் உறவுகளின் இடைவெளி அதிகமாகும்.
ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த வாரம் சௌகரியம் பெருகும் வாரம். மனதிற்குப் பிடித்தமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தடைப்பட்ட அரசு உதவி கிடைக்கும். நீண்ட தூரப் பயணங்கள் பலன் தரும். இல்லற வாழ்வில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்குப் செல்வாக்கு உயரும். உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். அரசாங்க காரியங்களில் தாமதமும், தவிர்க்க முடியாத அரசு சம்பந்தப்பட்ட நெருக்கடிகள் வழக்குகள் ஏற்படலாம் கவனம் தேவை.
மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த வாரம் சவால்களைச் சமாளிக்கும் வாரம். தகவல் தொடர்பு, எழுத்துத் துறையினருக்கு புதிய வழிகள் திறக்கும். வாக்கு வன்மையால் காரியங்களைச் சாதிப்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் இணக்கமான சூழல் நிலவும். உத்தியோகத்தில் இடமாற்றம் கோருபவர்களுக்குச் சாதகமான உத்தரவு வரும். எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் சிறிய பிரச்னைகள் வரலாம். சில எதிர்பாராத நெருக்கடிகள் ஏற்படலாம். வண்டி வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும்.
கடகம்

கடக ராசியினருக்கு இந்த வாரம் மன நிறைவும் மகிழ்ச்சியும் தரும் வாரம். கற்பனைத் திறன் மற்றும் படைப்பாற்றல் வெளிப்படும். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் சொல்லுக்கு மரியாதை கூடும். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத வருமானம் வந்து சேரும். தொழில் விஸ்தரிப்பு முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். தடைகள் விலகும். சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெறும். குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் ஒன்று எதிர்பார்க்க அது வேறு விதமாக ஏமாற்றமாக இருக்கும்.
சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் அதிகாரமும் அந்தஸ்தும் மேலோங்கும் வாரம். அரசாங்க வழியில் சலுகைகள் கிடைக்கும். பூர்வீகச் சொத்துக்களில் வில்லங்கங்கள் விலகும். தந்தை வழி உறவுகள் ஆதரவாக இருப்பார்கள். அரசியல் களத்தில் புதிய பதவிகளும் கௌரவமும் தேடி வரும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை வெற்றி தரும். நிலுவையில் இருந்த வரவுகள் கைக்கு வந்து சேரும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக முடியும். பொது வாழ்வில் உள்ளவர்கள் புதிய பதவிகளைப் பெறுவார்கள். தகவல் தொடர்புகளில் மிகுந்த கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அலட்சியம் வேண்டாம்.
கன்னி

கன்னி ராசியினருக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரம். சிக்கலான காரியங்களை எளிதில் முடிப்பீர்கள். அறிவு சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டுப் பயண முயற்சிகள் கைகூடும். சமூகத் தொண்டில் இருப்பவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்குத் தெம்பளிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். வாழ்க்கையின் பின்னடைவுகள் சரியாகும். தொழிலில் முன்னேற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் வீட்டில் குழப்பங்கள் எட்டிப் பார்க்கும்.
துலாம்

துலாம் ராசியினருக்கு இந்த வாரம் ஆடம்பரம் நிறைந்த வாரம். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்களின் பேச்சு மற்றவர்களைக் கவர்ந்து இழுக்கும். வாகனப் பயணங்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் சுமுகமான சூழல் நிலவும். பங்குச் சந்தை முதலீடுகளில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் மதிப்பும் அதிகரிக்கும். ரொம்ப நாளாக எதிர்பார்த் திருந்த பணம் கைக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவுகளில் கவனம் தேவை சின்ன விஷயத்துக்குக் கூட பிரச்னை வந்து விடும்.
விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு இந்த வாரம் துணிச்சலும் வீரியமும் நிறைந்த வாரம். எதையும் எதிர்கொள்ளும் மனத்திடம் பிறக்கும். அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு மேலிடத்தின் ஆசி கிட்டும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி நிலவும். சகோதர வழி அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் உங்கள் கை ஓங்கும். நண்பர்கள் வட்டாரம் விரிவடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வுண்டு. வெகு நாளாகச் செய்ய விரும்பி தள்ளிப்போன முயற்சிகளை இப்போது செய்யத் தொடங்கி விடுவீர்கள். சகோதர உறவுகளிடம் விட்டுக் கொடுத்து பழக வேண்டும்.
தனுசு

தனுசு ராசியினருக்கு இந்த வாரம் தர்மமும் ஞானமும் தழைக்கும் வாரம். பெரியோர் ஆசி கிட்டும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரப் பயணங்களால் பெரும் பயன் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நிறைவேறும். குடும்பப் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். பிள்ளைகளின் கல்வி மற்றும் சுப காரியங்கள் மகிழ்ச்சி தரும். உறவினர்களின் வருகையால் கலகலப்பான சூழல் நிலவும். விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டு. வர வேண்டிய கடன்கள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். பணத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
மகரம்

மகர ராசியினருக்கு இந்த வாரம் நிதானமும் பொறுமையும் வெற்றி தரும் வாரம். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். பழைய சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு வரும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பெரும் துணையாக இருக்கும். அரசியல்வாதிகள் பேச்சில் நிதானம் காப்பது நல்லது. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிட்டும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். சகோதர உறவுகள் சிறப்பாக இருக்கும். முயற்சிகள் பலனளிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். சில நேரங்களில் செலவுக்குக் கடன் வாங்க வேண்டிய நெருக்கடிகள் வரலாம்.
கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த வாரம் மாற்றங்கள் நிறைந்த வாரம். உங்களின் தனித்துவம் வெளிப்படும். பொதுநலக் காரியங்களில் ஈடுபாடு கூடும். தடைப்பட்ட பயணங்கள் மீண்டும் தொடங்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். சமூக வலைதளங்கள் மூலம் நற்பெயர் பெருகும். நண்பர்களின் ஆதரவு மனதிற்குத் தெம்பளிக்கும். திருமண முயற்சிகள் கைகூடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை இருந்தாலும் மனதிற்குப் பிடித்தமான சூழல் நிலவும். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். எதற்காகவும் நீங்கள் பயப்படத் தேவையில்லை. குடும்ப உறவுகளில் அவ்வப் பொழுது கருத்து வேறுபாடுகள் தலைதூக்கலாம்.
மீனம்

மீன ராசியினருக்கு இந்த வாரம் மன நிறைவும் சுபிட்சமும் நிறைந்த வாரம். கனவுகள் நனவாகும். ஆன்மீகப் பயணம், சொத்து சேர்க்கை மற்றும் லாபம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். அரசியல்வாதிகளுக்குத் தலைமையின் ஆதரவு பூரணமாகக் கிடைக்கும். பிள்ளைகளின் வெற்றியால் பெருமை அடைவீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வும் பாராட்டும் தேடி வரும். கூடுதல் வருமானத்திற்கும் வழி பிறக்கும். மனைவியின் அன்பும் ஒத்துழைப்பும் குடும்பத்தில் உண்டு. நண்பர்களால் சிறு ஏமாற்றம் உண்டு.
இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சி பலன்கள் 2026


