மேஷம்

இந்த வாரம் பயணங்கள் மூலம் பல நன்மைகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நடக்கும். வியாபாரம், தொழில், உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். போட்டியாளர் விலகுவர். நண்பர்களோடு சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்தனியார் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் விசேஷங்களில் உற்சாகமாக கலந்து கொள்வார்கள். குடும்பத்தில் சுபநிகழ்வுகள் நடக்கும். புதுமையான முறையில் விஷயத்தை அணுகுவீர்கள். சகோதரர் களால் சிக்கல்கள் வரலாம் அனுசரித்து செல்லவும்.
ரிஷபம்

இந்த வாரம் மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். மனதில் புதிய உற்சாகம் உருவாகும். மனக்கவலை மாறும். பண விஷயத்தில் நெருக்கடிகள் தீரும். முயற்சிகளில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு வாய்ப்புண்டு. நண்பர்கள் தேடி வந்து உதவி செய்து ஆச்சரியப்படுத்துவார்கள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் உயரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். திருமண வயதினருக்கு வரன் வரும். வெள்ளிக்கிழமை விழிப்புடன் செயல்படுவது அவசியம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் தொடர்பான படிப்புகளில் இணைவார்கள். அரசு பணியாளர்கள் பணியிடத்தில் மதிப்பும் பதவி உயர்வும் பெறுவார்கள்.
மிதுனம்

இந்த வாரம் உறவுகளிடையே மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு வழி நெருக்கடிகள் நீங்கும். நினைத்த வேலை நடக்கும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். சுப காரியங்களில் முன்னென்று செயல்படுவீர்கள். அரசுத்துறை உத்தியோகஸ்தர்கள் பணி மாற்றம் கிடைக்கப் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் திறமை காட்டுவார்கள். அரசு வழி முயற்சி லாபம் தரும். ஞாயிறு அன்று வேலைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வழக்குகளில் உள்ள சிக்கல்கள் தீரும். பாகப்பிரிவினை சுமுகமாகும்.
கடகம்

இந்த வாரம் கடகம் ராசியினருக்கு உற்சாகமான காலகட்டம். சுபச் செலவுகள் உண்டு. உறவினர்களோடு இணைந்து சுற்றுலா செல்வது மற்றும் சமூக பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். தனியார் மற்றும் அரசு துறை பணியாளர்கள் உயர் அதிகாரியின் ஆதரவை பெறுவார்கள். திட்டமிட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். நெருக்கடி நீங்கும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமண வயதினருக்கு வரன் வரும். செவ்வாய்க்கிழமை அமைதி காப்பது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்விகிரவும் உயர்கல்விக்கான சர்டிபிகேட் படிப்புகளை மேற்கொள்வார்கள். குடும்பத்தில் அவ்வப்பொழுது கணவன் மனைவி உறவுகளில் சிக்கல்கள் வரலாம்.
சிம்மம்

இந்த வாரம் எதிர்பார்த்த தனவரவு வந்து சேரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அகலும். உங்களுடைய உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதில் கவனம் தேவை. வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பம், தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில் கல்வி, பொறியியல் கல்வி சம்பந்தமான வழிகாட்டுதல் கிடைக்கப் பெறுவார்கள்.
கன்னி

இந்த வாரம் புதிய தொடர்புகள் மூலம் நன்மைகள் உண்டு. உறவினர் வருகை, சுப காரிய பேச்சு, சுபச்செலவு ஆகியவற்றில் உற்சாகமாக செயல்படுவீர்கள். கூட்டு முயற்சியாக வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். தனியார் துறை ஊழியர்களுக்கு உயர் அதிகாரியின் சிபாரிசில் பதவி உயர்வு உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறவினர்களோடு சுற்றுலா சென்று மனம் மகிழ்வார்கள். நியாயமான விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். தொழில் வளர்ச்சியில் மாற்றங்கள் நிகழும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புண்டு.
துலாம்

இந்த வாரம் பல நன்மைகள் உண்டு. இல்லத்தரசிகள் நீண்ட நாட்களாக மனதில் நினைத்த சுப காரியங்களை நடத்தி முடிப்பார்கள். பண வரவில் இருந்த தடை விலகும். தடைபட்ட வேலை நடக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். ஒரு சிலர் வீடு மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். அரசு நிறுவன ஊழியர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். பொன் பொருள் சேரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ஒரு சிலர் புதிய வாகனம், இடம், வீடு வாங்குவீர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் செய்முறை தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெறுவார்கள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரம் தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். உடல்நிலை சீராகும்.
விருச்சிகம்

இந்த வாரம் குடும்பத்தோடு சுற்றுலா செல்வார்கள். மனதில் புதிய மாற்றங்கள் உருவாகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சொந்தபந்தங்களுக்கு இடையில் சுமுகமான உறவு நிலவும். நீங்கள் எடுக்கும் முயற்சிவெற்றியாகும். பண வரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடந்தேறும். அரசுத்துறை ஊழியர்கள் அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழிற்கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. இழுபறியாக இருந்த பிரச்னை முடிவாகும். நீங்கள் நினைக்கும் வேலை நடக்கும். சொத்து, வாகனம் என்ற கனவு நனவாகும். திருமண வயதினருக்கு வரன் வரும்.
தனுசு

இந்த வாரம் பல நல்ல மாற்றங்கள் உண்டு. ஜாதக யோகங்களுக்கு ஏற்ப பலருக்கு சொந்த வீடு வாங்கும் பாக்கியம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த மன கசப்பு நீங்கம். அரசு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. வேலைத்தேடி வருபவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டில் படிப்பதற்கான தகவல்களை பெறுவார்கள். உடல்நிலையில் சின்னச்சின்ன பாதிப்பு ஏற்படும். பிள்ளைகளுக்காக முயற்சி மேற்கொள்வீர். நினைத்த இடத்தை வாங்குவீர். பொன்பொருள் சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.
மகரம்

இந்த வாரம் பல அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். பல சுப நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவன ஊழியர்கள் பணியிட மாற்றம் பெறுவர். தடைப்பட்ட வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும். ஒரு சிலருக்கு புதிய சொத்து சேரும். முயற்சி வெற்றியாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்க தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். இதுவரை இருந்த நெருக்கடி நீங்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். நினைப்பது நடக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். திருமண வயதினருக்கு வரன் வரும். நினைத்த வேலைகளை நினைத்தபடி செய்து லாபம் காண்பீர்.
கும்பம்

இந்த வாரம் சமூக அந்தஸ்து அதிகரிக்கும். பொருளாதார வரவும் உண்டு. உங்கள் வேலைகளில் வேகம் இருக்கும். உடல்நிலை சீராகும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் இருந்த தடை விலகி முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். சொந்த பந்தங்கள் அனுசரித்து நடந்து கொள்வார்கள். அரசு நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு புதிய பொறுப்புகளால் மதிப்பு அதிகரிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொழில் கல்வி கற்பதற்கான சூழ்நிலை உருவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு கௌரவம் அதிகரிக்கும். புதிய பதவிகள் கிடைக்கும்.
மீனம்

இந்த வாரம் பல சுப காரியங்களில் குடும்பத்தோடு பங்கேற்று மகிழ்ச்சி அடைவீர்கள். தம்பதிகளுக்குள் இருந்த பிரச்னை விலகும். திருமண வயதினருக்கு வரன் வரும். புதிய இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழில் முன்னேற்றம் அடையும். செலவினங்கள் அதிகரித்தாலும் அதற்கேற்ற தன வரவு உண்டு. தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள் குடும்ப உறவினர்களோடு சுற்றுலா சென்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாரத்தின் நடுவில் செயல்களில் கவனம் தேவை. புதிய முதலீட்டில் எச்சரிக்கை அவசியம். அவசரப்பட்டு எதிலும் இறங்க வேண்டாம். உங்கள் வேலைகளில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
இதனையும் படியுங்கள் : சனி புதன் சேர்க்கை 2025