மேஷம்
இந்த வாரம் மேஷ ராசிக்காரர்கள் தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். நிதி நிலையில் சீரான முன்னேற்றம் இருக்கும். பழைய முதலீடுகள் மூலம் லாபம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்தவும். நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ள ஆற்றல் கிடைக்கும். வீடு, மனை வாங்குவதில் உள்ள சிக்கல்கள் தீரும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கணவன் – மனைவி ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த வாரமாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருந்தாலும், எதிர்பாராத பயணச் செலவுகள் வந்து சேரும். கடன் விவகாரங்களில் நிதானம் தேவை. சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல்கள் கைகூடும். உறவினர்களுடனான சந்திப்பு உற்சாகத்தைத் தரும். வெளிநாட்டு வேலை முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வதரிசனம் பெரியோர் ஆசி கிடைக்கும். பேச்சு ஆகியவற்றில் கவனம் தேவைப்படும்.வேலை அழுத்தம் அதிகரிக்கும். குடும்பத்தையும் வேலையும் இணைந்து பிரசினை தரும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இந்த வாரம் பொருளாதார ரீதியாகச் சிறப்பான வாரமாக அமையும். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சேமிப்புகள் உயரும். ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும். பதவி, பரிசு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். சிலருக்கு அவ்வப்பொழுது கவலைகள் இருந்து கொண்டே இருக்கும் காரணம் தெரியாத கவலைகளாக இருக்கும். பிறருக்கு வாக்குறுதிகளைத் தர வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதி நிலைமை சீராக இருக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான உறவு நிலவும். சக ஊழியர்களின் மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். ஆன்மீகப் பயணங்களுக்கான திட்டமிடல்கள் கைகூடும். திறமைக்கான பாராட்டும், புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். நன்றாகப் பேசுபவர்கள் கூட திடீரென்று மன வருத்தம் வந்து பிரிந்து விடலாம்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த வாரம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தந்தை வழிச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். புதிய முதலீடுகளுக்கு இது உகந்த வாரம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் களைகட்டும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடு வரலாம். விட்டுத்தர வேண்டும். காதல் விஷயங்களில் குழப்பம் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. திடீர் செலவுகள் உங்கள் சேமிப்பைக் கரைக்கும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். வாழ்க்கைத் துணையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உறவினர்களிடம் பேசும்போது நிதானம் தேவை. சக ஊழியர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம். துணிச்சல் அதிகரிக்கும். தகவல் தொடர்புகளால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். கடின உழைப்பால் வருமானம் கிடைக்கும். சகோதரர்களுடன் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வரலாம் விட்டுத் தந்து செல்ல வேண்டும்.
துலாம்
இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு கூட்டுத் தொழில் மூலம் லாபம் பெருகும். புதிய நபர் அறிமுகத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வாகனங்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். வாழ்க்கைத் துணையுடன் நீண்ட நாட்களாக இருந்த பிணக்குகள் தீரும். உறவினர்களிடையே உங்கள் மதிப்பு உயரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்குப் பணி நிரந்தரமாகும். குடும்ப வளம் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் பிரச்னைகள் இருப்பதற்கு வழியில்லை. வாகனங்களில் எச்சரிக்கையோடு செல்ல வேண்டும். துணைவருடன் வாக்குவாதங்கள் நேரலாம்.
விருச்சிகம்
இந்த வாரம் விருச்சிக ராசியினருக்கு பழைய கடன்கள் அடையும். பணி வாய்ப்புகள் ஏற்படும். தனியார் உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது அவசியம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் புதிய இடங்களுக்கு வாகனங்களில் செல்கையில் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். நிலம் வீடு விற்பனையில் ஆதாயம் உண்டு. சகோதர உறவுகள் கை கொடுக்கும். உடல் நிலையை சீராக வைத்துக் கொள்ளவும். மருத்துவச் செலவுகள் உண்டு. வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
புத்திசாலித்தனத்தால் வருமானத்தை உயர்த்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியமாக இறங்கலாம். பிள்ளைகளால் பெருமை சேரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடல் நடக்கும். தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெறுவீர்கள். சிலருக்கு உடல் நலமும் மனநிலையும் பாதிக்கக்கூடும். பிரயாணங்களில் கவனம் தேவை. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை தவிர்க்கப்பட வேண்டும்.
மகரம்
வீடு, நிலம் சம்பந்தமான விவகாரங்கள் சாதகமாகும். பொருளாதார நிலை சீராக இருக்கும். தாயார் வழி உறவுகள் மூலம் நிதி உதவி கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு உற்சாகம் தரும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்தையும் உயர்ந்த நிலையை அடையும் வாய்ப்பையும் தரும். வழக்குகள் பிரச்னை சிரமத்தைத் தரும். விதி மீறல்களை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.
கும்பம்
தன்னம்பிக்கை கூடும் வாரமிது. முயற்சியால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். சகோதர சகோதரிகள் மூலம் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உங்கள் புகழ் பரவும். குடும்பத்தில் உற்சாகம் ததும்பும். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம் திருப்தி தரும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சக பணியாளர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருக்கும். ஆடம்பர வசதிக்கான பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படலாம். அரசாங்கம் தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை.
மீனம்
நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் வரும். சேமிப்புகள் உயரும் வாரமிது. நீண்ட நாளாக மனதில் நினைத்த ஒன்று கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் சொல்லுக்கு அனைவரும் மதிப்பளிப்பார்கள். பிள்ளைகளின் சுப காரியங்கள் கைகூடி வரும். உறவினர்கள் உங்கள் ஆலோசனைகளை நாடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு தாயாருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மன அமைதி குறையலாம். செலவுகளில் கவனம் தேவை.
இதனையும் படியுங்கள் : 2026 கஜகேசரி யோகம் பலன்


