- Advertisement -
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் அரைக்கீரையில் பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : சுவையான அரைக்கீரை குழம்பு செய்வது எப்படி ?
- Advertisement -
இந்த அரைக்கீரை பொரியலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை நீங்கள் செய்து கொடுத்தால் குழந்தைகள் ஒதுக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் கீரை பிடிக்காது என்பவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த அரைக்கீரை பொரியல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என் அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
அரைக்கீரை பொரியல் | Arai Keerai Poriyal Recipe In Tamil
பொதுவாக கீரையில் ஊட்டச்சத்து அதிகம் நிறைந்திருக்கும். இத்தகைய கீரையை சிலருக்கு கடைந்து சாப்பிட பிடிக்கும். பலருக்கு பொரியல் செய்து சாப்பிட பிடிக்கும் அதிலும் அரைக்கீரையில் பொரியல் செய்து சாப்பிட்டால் தான் சுவையாக இருக்கும். அந்த வகையில் இந்த அரைக்கீரை பொரியல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டிருக்கு அதனை படித்து பார்த்து நீங்களும் செய்து பாருங்கள்.
Yield: 4 people
Calories: 89kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கட்டு அரைக்கீரை
- 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
- 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- உப்பு தேவையான அளவு
தாளிக்க:
- 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- ½ டேபிள் ஸ்பூன் கடுகு
- ½ டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 2 பச்சை மிளகாய்
- கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை
- முதலில் கீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், இரண்டையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
- துவரம் பருப்பை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் காடையை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, போட்டு தாளிக்கவும்.
- கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் கீரை மற்றும் பருப்பை சேர்த்து கிளறவும்.
- பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கீரை வேகும் வரை கிளறவும்.
- இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து உப்பு சரி பார்த்து அடுப்பை அணைக்கவும்.
- இப்பொழுது சுவையான அரைக்கீரை பொரியல் ரெடி.
Nutrition
Serving: 400gram | Calories: 89kcal | Carbohydrates: 2g | Protein: 12g | Saturated Fat: 0.08g | Sodium: 21mg | Potassium: 383mg | Fiber: 4g | Sugar: 1.2g | Vitamin A: 6IU | Iron: 37mg