- Advertisement -
Home ஆன்மிகம் வார ராசிபலன் – 24 ஆகஸ்ட் 2025 முதல் 30 ஆகஸ்ட் 2025 வரை!!

வார ராசிபலன் – 24 ஆகஸ்ட் 2025 முதல் 30 ஆகஸ்ட் 2025 வரை!!

- Advertisement -

மேஷம் 

இந்த வாரம் மேஷம் ராசியினருக்கு சுக ஸ்தான சுபர்கள் மனதில் உற்சாகம் ஏற்படுத்துவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும். அரசு உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாரா செலவுகள் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர் வெளிநாட்டு கல்வி, பணி வாய்ப்பு குறித்த தகவல்களை பெறுவர். போட்டித் தேர்வில் வெற்றி பெறுவார்கள். மனைவியின் ஆசைகள் நிறைவேறும். சிலருக்கு இடமாற்றம் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் சந்தோஷம் உண்டு. புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பெற்றோர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் வரன் அமையும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி பெருகும். சிலருடைய உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சில முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும்.

ரிஷபம் 

இந்த வாரம் ரிஷபம் ராசியினருக்கு 4-ம் இடத்தில் ஆன்மிக கிரகங்கள் சேர்க்கை பெறுவதால் தெய்வீக எண்ணங்கள் உருவாகும். அரசு உத்தியோகஸ்தர்கள் பணி உயர்வு பெறுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உண்டாகும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தேர்வுகள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவர். கலைஞர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்களால் ஆதாயம் ஏற்படும். தொழிலில் புது உத்திகளைக் கையாளுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். ரியல் எஸ்டேட் தொழில்கள் நல்லவிதமாக நடக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளால் பிரச்னைகள் உண்டு. சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீக்கலாம். 

- Advertisement -

மிதுனம் 

இந்த வாரம் மிதுனம் ராசியினருக்கு 2-ல் உள்ள சுபர்கள் சேர்க்கை தன வரவை அதிகரிக்கும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடங்களில் பணி சம்பந்தமான விஷயங்களை மட்டும் பேசுவது நல்லது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போட்டித்தேர்வுகளில் திறமையாக செயல்படுவர். நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் கருத்து வேற்றுமை மறையும் அரசாங்க காரியங்கள் சாதகமாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. சிலர் வாகனங்களை மாற்றுவார்கள். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள், பிரச்னைகள் வரலாம். சேமிப்புகளை கவனமாகக் கையாள வேண்டும். சகோதர உறவுகளில் சற்று பிரச்சினைகள் வரலாம். ஒரு சிலருக்கு கண்களில் பிரச்னை ஏற்படக்கூடும்.

கடகம் 

இந்த வாரம் கடக ராசியினருக்கு ராசியில் சஞ்சரிக்கும் சுபர்களால் திடீர் அதிர்ஷ்டம் உண்டு. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து அவரது ஆதரவை பெற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு புதிய இடங்களுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கணவன் மனைவி உறவுகளில் அன்பு அதிகரிக்கும். செயல் ஊக்கம் பிறக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மனதில் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் திறமும் பிறக்கும். விருந்து கேளிக்கை முதலிய விசேஷங்களை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வேலையை எதிர்பார்த்தவர்களுக்கு அதற்கான சூழ்நிலை அமையும். பேச்சில் கவனம் தேவை. உறவுகளிடத்தில் சுமுகமான பேச்சு தேவை. நிதானமாக அணுகுமுறை நல்லது.

சிம்மம் 

இந்த வாரம் சிம்மம் ராசியினருக்கு ராசியதிபதி, கேது சேர்க்கை ஆன்மிக தொடர்புகளை தரும். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் தகுந்த மதிப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் நண்பர்களோடு வண்டி வாகனங்களில் நிதானமாக செல்லவும். நினைத்த செயல்கள் நிறைவேறும். ஆசைகள் பூர்த்தியாகும். நல்ல லாபம் தொழிலில் கிடைக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சிக்கல்கள் வராது. விருந்துகள் மூலம் மனமகிழ்ச்சி வரும். முக்கியமான பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அவர்களால் செலவுகள் ஏற்படும். சக வியாபாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

கன்னி 

இந்த வாரம் கன்னி ராசியினர் நிதானமாக செயல்பட வேண்டிய காலம் இது. தனியார் உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் ஆலோசனைப்படியே செயல்பட வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடுதல் கவனத்தோடு படிக்க வேண்டும். லாபம் அதிகரிக்கும். வேலையை இழந்தவர்கள் மறுபடியும் வேலை வாய்ப்பினைப் பெறுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும். பிள்ளையின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முயற்சிகள் வெற்றி பெறும். கடன்களைக் கொடுத்து விடுவீர்கள். வரவேண்டிய கடன்களும் வசூலாகிவிடும். புதிய பொருட்களையும் ஆடைகளையும் வாங்குவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்றம் இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். சிலர் பணியில் இருந்து விலக நேரலாம். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் குறையும். 

துலாம் 

இந்த வாரம் துலாம் ராசியினருக்கு பத்தாம் இடத்தில் உள்ள சுபர்களால் அந்தஸ்து அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் உறவினர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொண்டு உற்சாகமாக இருப்பர். நல்ல நிகழ்வுகளை எதிர் பார்க்கலாம். சுபகாரியங்கள் நடைபெறும். தொழில் முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகளால் தொழில் வேகம் எடுக்கும். காரியத் தடைகள் அகன்றுவிடும். வீட்டில் ஆதரவும் அன்பும் கிடைக்கும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். சகோதர உறவுகளில் விரிசல்களும் விலகல்களும் ஏற்படலாம். தேவையற்ற பகை ஏற்பட்டு மன நிம்மதி குறையலாம். எதிர்பாராத பிரச்னைகளால் தூக்கம் நிம்மதி கெடலாம்.

விருச்சிகம் 

இந்த வாரம் விருச்சிகம் ராசியினருக்கு 10-ல் உள்ள சூரியன், கேது ஆன்மிக தொடர்புகளை வழங்குவார்கள். உத்தியோகஸ்தர்கள் புதிய பொறுப்புகளை ஏற்று திறமையாக செயல்படுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்து திட்டமிட வேண்டும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. பொருளாதார ஏற்றம் உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. பகை விலகி வழக்குகளில் வெற்றி உண்டு. வருமானம் பெருக புதிய வழிகள் பிறக்கும். குடும்பத்தில் நடைபெறும் சுபகாரிய முயற்சி வெற்றி பெறும். நண்பர்களால் ஆதரவு உண்டு. ஆரோக்கியத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம். மருத்துவ உதவிகள் தேவைப்படலாம். வேலை பளுவால் எழும் மன அழுத்த பிரச்னைகளால் அமைதி குறையலாம்.

தனுசு 

இந்த வாரம் தனுசு ராசியினருக்கு 7-ல் உள்ள ராசியதிபதி, 8-ல் உள்ள சுபர்கள் காரிய வெற்றி தருவார்கள். அரசு உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த அங்கீகாரம் பெறுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவர். வாழ்க்கையில் புதிய ஏற்றங்களும் முன்னேற்றங்களும் கிடைக்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பாராத மகிழ்ச்சியும் நன்மையும் கிடைக்கும். புதிய நண்பர்களஅ கிடைப்பார்கள். கொடுக்கல் வாங்கல்களில் சிக்கல்கள் தீரும். பத்திரப் பதிவுகள் வெற்றிகரமாக முடியும். எதிர்பாராத உதவி கிடைக்கும். மகன் தந்தை உறவுகளில் கருத்து வேறுபாடுகள் வரலாம். தந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் ஏற்படலாம்.

மகரம் 

இந்த வாரம் மகரம் ராசியினருக்கு 7-ல் உள்ள சுப கிரகங்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்துவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் பணியிடத்தில் புதிய மாற்றங்களை சந்திப்பர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தனித்திறமைகளை வெளிக்காட்டி பாராட்டு பெறுவர். புதிய ஒப்பந்தங்களின் மூலம் வாழ்வின் மற்றொரு படிக்கு முன்னேறுவீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். தாய்வழி சொந்தங்கள் கை கொடுக்கும். கணவன் அல்லது மனைவி மூலம் ஏதோ ஒரு வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பரிசுப் பொருட்களால் மகிழ்ச்சி அடைய வாய்ப்புண்டு. சிலருக்கு தந்தையோடு கருத்து வேற்றுமை ஏற்பட்டு மனதில் கஷ்டம் ஏற்படலாம். தேவையற்ற வாக்குவாதங்களும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.‌

கும்பம் 

இந்த வாரம் கும்பம் ராசியினருக்கு 7-ல் உள்ள சூரியன் நிர்வாகம், அரசு தரப்பு நன்மைகளை தருவார். அரசு உத்தியோகஸ்தர்கள் மனதிற்கு இனிய சூழலில் பணியாற்றுவர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வேடிக்கைகளில் இருந்து விலகி பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். நிர்வாகத் திறனால் புதிய வளர்ச்சியைப் பெற வாய்ப்புண்டு. பொருளாதாரத்தில் குறைவு இல்லை. ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கான பணம் கிடைத்துவிடும். தொழில் வளர்ச்சி, லாபம் போன்றவற்றை எதிர்பார்க்கலாம். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் வெற்றி பெறும். பத்திரிகை தொழிலில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. சிலருக்கு தேவையற்ற மனச்சங்கடங்கள் ஏற்படும். பெண்களால் எதிர்பாராத பிரச்னைகள் உண்டு.

மீனம் 

இந்த வாரம் மீனம் ராசியினருக்கு 5-ல் உள்ள சுப கிரகங்கள் மனதில் உற்சாகத்தை தருவார்கள். தனியார் உத்தியோகஸ்தர்கள் வேறு பணி வாய்ப்பு குறித்த தகவலை பெறுவார்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆசிரியர்களது வழிகாட்டுதல்களை பெறுவது எதிர்கால வெற்றிக்கு வழிவகுக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு எதிராக வேலை செய்பவர்கள் அடங்கிப் போவார்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். தேவையற்ற மனக் கவலைகளும் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத விதத்தில் அவமானங்கள் நிகழலாம். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகளை தவிர்ப்பது நல்லது.

இதனையும் படியுங்கள் : குரு பெயர்ச்சியால் வெற்றி பெறும் ராசிகள்