Advertisement
சைவம்

பூ போன்று மென்மையான அவல் இடியாப்பம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

Advertisement

தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவை தமிழர்கள் இடம்பெயர்ந்த இலங்கை, மலேசியா, மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பிரபலமடைந்து இருக்கிறது. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன.

இதனையும் படியுங்கள் : பூ போன்ற காஞ்சிபுரம் இட்லி இப்படி செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

Advertisement

ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும். இந்த அற்புதமான மற்றும் அனைவருக்கும் ஏற்ற காலை உணவாக உள்ள அவல் இடியாப்பத்தை செய்வதற்கான எளிய செய்முறையை பார்க்கலாம். இந்த அவல் இடியாப்பத்தை காலை உணவாகவோ, சிற்றுண்டியாகவோ அல்லது டிஃபினாகவோ சாப்பிடலாம்.

அவல் இடியாப்பம் | Aval Idiyappam

Print Recipe
தமிழத்தில் உள்ள மிக பிரபலமான காலை உணவுகளுள் இடியாப்பமும் ஒன்று. தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவை தமிழர்கள் இடம்பெயர்ந்த இலங்கை, மலேசியா, மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் பிரபலமடைந்து இருக்கிறது. இவை முழுக்க முழுக்க ஆவியில் வேக வைக்கப்படுவதால் வயதானவர்களும் குழந்தைகளும் விரும்பி உண்பவர். மேலும் இவை எளிதில் செரிமானமானமும் ஆகின்றன. ஆவியில் நன்கு வேக வைக்கப்பட்ட இடியாப்பத்தில் சிறிதளவு தேங்காய் துருவல் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உங்கள் காலை உணவு திருப்திகரமாக அமையும்.
Course
Advertisement
Breakfast, dinner
Cuisine Indian
Keyword idiyappam
Prep Time 15 minutes
Cook Time 10 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 152

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 இடியாம்பம் பிழியும் இயந்திரம்

Ingredients

  • 5 கப் அவல்
  • 1 ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 கப் தேங்காய்
  • உப்பு தேவையானஅளவு
  • சர்க்கரை தேவையானஅளவு

Instructions

  • முதலில் பெரிய துளை உள்ள சல்லடையில் அவல் சேர்த்து லேசாக சலித்து கொள்ளவும்.
    Advertisement
  • பின் வெறும் வாணலியில் அவல் சேர்த்து கைகளால் அழுத்திப் பார்த்தால் நொடியும் அளவிற்கு கலர் மாறாமல் வறுக்கவும்.
  • பின் ஆற வைத்து மிக்ஸிக்கு மாற்றி மையாக அரைக்கவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் அவலுக்கு 1கப் தண்ணீர் வீதம் 4.5கப் தண்ணீர் ஊற்றி எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்த அவல் சேர்த்து கிளறவும். அவல் வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும்.
  • பின்னர் வேகவைத்த மாவை வேறு தட்டிற்கு மாற்றி குளிர் நீரில் கைகளை நனைத்து நன்றாக அழுத்தி உருண்டை பிடிக்கவும்.
  • இனி ஒவ்வொரு உருண்டைகளாக இடியாப்ப அச்சில் வைத்து பிழிந்து இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான். சுவையான அவல் இடியாப்பம் ரெடி. எப்பொழுதும் போல் தேங்காய் மற்றும் சர்க்கரை அல்லது தேங்காய்பால் சேர்த்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 700g | Calories: 152kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Fat: 2g | Sodium: 60mg | Vitamin A: 115IU | Calcium: 34mg | Iron: 3.9mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

7 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

11 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

11 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

11 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

12 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இது என்னடா முட்டைக்கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா? இந்த முட்டை கறி செய்றதுக்கு நம்ம முட்டையை வேக வச்சு சேர்க்காம முட்டையை…

14 மணி நேரங்கள் ago