- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
பெரும்பாலும் வீட்டில் இருக்க கூடிய தாய்மார்கள் அனைவரும் நினைப்பது சட்டுனு ஏதாவது சமைத்து விட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் தான். அந்த வகையில் அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த பதிவு உங்களுக்கு தான். இந்த பதிவில் சுவையான அவரைக்காய் கீமா ரைஸ் எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள் 15 நிமிடங்களில் ஒரு சூப்பரான சாதம் ரெடி ஆகிடும் அதுவும் சுவையாக இருக்கும்.
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது நம் பிள்ளைகளுக்கு வழக்கமாக நாம் செய்து கொடுக்கும் லஞ்ச் பாக்ஸ் ரெசிபிகளுக்கு மாற்று உணவுக்கான நமது தேடல் தீராதது.
அந்த வகையில் நாம் இன்று இங்கு காண இருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் மிகவும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிபியான அவரைக்காய் கீமா ரைஸ். பொதுவாகவே அவரைக்காய் வைத்து குழம்பு, கூட்டு, பொரியல் என்று வைத்து தான் நீங்கள் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் சற்று வித்தியாசமாக ஏதாவது செய்ய விரும்பினால் இந்த ரெசிபியை செய்து பாருங்கள். இதன் சுவை வேற லெவலில் இருக்கும். இப்போது இந்த சுவையான அவரைக்காய் கீமா ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : ருசியான அவரைக்காய் புளிக்குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!
Ingredients
Method
முதலில் சோயாவை சுடு தண்ணீரில் நன்கு ஊற வைத்து பின் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, சோம்பு சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் நறுக்கிய அவரைக்காய், அரைத்த சோயா சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மட்டன் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு வடித்து வைத்துள்ள சாத்ததை சேர்த்து அதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்கு வதக்கவும். பின் கொத்தமல்லி, நெய் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான அவரைக்காய் கீமா ரைஸ் தயார்.






