- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- andhra, Indian
- Course
- Side Dish
அவரைக்காய் வைத்து பொரியல் அவரைக்காய் பருப்புசிலி அவரைக்காய் சாம்பார், அவரைக்காய் கூட்டு இதெல்லாம் செஞ்சிருப்பீங்க ஆனா இன்னைக்கு நம்ம சூப்பரான ஆந்திரா ஸ்டைல் காரசாரமான அவரைக்காய் உள்ளிக்காரம் செய்ய போறோம். சுட சுட சாதத்துல போட்டு மேல கொஞ்சமா நல்லெண்ணெய் இல்லனா நெய் ஊத்தி பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு சூப்பரா இருக்கும். இட்லி தோசை சப்பாத்தி பூரி எல்லாத்துக்குமே இந்த அவரைக்காய் உள்ளிக்காரம் ரெசிபி ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும்.
இந்த ருசியான சுவையான அவரைக்காய் உள்ளிக்காரம் ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க. சாம்பார் சாதம் ரசம் சாதம், முட்டை சாதம் புளி சாதம் லெமன் சாதம், தயிர்சாதம் எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும். நல்லா காரசாரமாக சாப்பிட பிடிக்கும் அப்படின்னா இந்த மாதிரி ஒரு தடவை அவரைக்காய் உள்ளிக்காரம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கொஞ்சம் காரம் கம்மியாவே செஞ்சு பாருங்க. இந்த அட்டகாசமான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க.
இதுக்கு நம்ம தனியா விதைகள் சீரகம்,வெங்காயம் எல்லாமே வதக்கி அரைக்கிறதால டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். இந்த டேஸ்டான ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பாக ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். ரசம் சாதத்துக்கு எல்லாம் இந்த சைடு டிஷ் வச்சு சாப்பிட்டா அவ்வளவு சூப்பரா சுவையான இந்த ரெசிபியை கண்டிப்பா எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க வீட்ல ஏதாவது விருந்து வைக்கும் போது கூட நீங்க இந்த ரெசிபியை சேர்த்து செய்யலாம் அவ்வளவு சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான அவரைக்காய் உள்ளிக்காரம் ஆந்திரா ஸ்டைலில் எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான அவரைக்காய் கூட்டு இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து தனியா விதைகள் சீரகம் காஷ்மீரி மிளகாய் காய்ந்த மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
அதனுடன் பூண்டு பற்கள் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய நாட்டு அவரைக்காய் சேர்த்து நன்றாக வதக்கி அரைத்த விழுது உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
அனைத்தும் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை நெய் சேர்த்து இறக்கினால் சுவையான அவரைக்காய் உள்ளிக்காரம் தயார்.






